நித்தியக்கடன் பிப்ரவரி 14 2022

🔆🔵🔆🔵🔆🔵🔆🔵🔆🔵🔆

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 14*

🔆🔵🔆🔵🔆🔵🔆🔵🔆🔵🔆

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁 திங்கட்கிழமை 
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 
மாலை:- நித்யானந்த தவம்.
 
🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 அதிகம் உறங்குபவர் அல்லது உறங்காமலேயே இருப்பவர், அதிகம் உண்பவர் அல்லது உண்ணாமலேயே இருப்பவர் இவர்களுக் கெல்லாம் இந்த குண்டலினி யோகம் சாத்தியம் கிடையாது. பகவத்கீதையில் வியாசர் இந்த வாசகத்தை தெளிவாக பதிவு செய்து இருக்கிறார். முழுக்க முழுக்க மறுக்கமுடியாத உண்மை. குண்டலினி யோகத்தில் வளர்ச்சி பெறவேண்டுமானால் இந்த ஒழுங்கமைப்பை, கோட்பாட்டை, கட்டமைப்பை, நீதியை பின்பற்றித்தான் ஆகவேண்டும் வேறு வழியே கிடையாது.

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 இந்த செயலுக்கு இது தான் விளைவு என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது ஒரு நாளும் ஒரு பொழுதும் மாற்ற முடியாது. அனால் இந்த செயல் விளைவு நீதியின் விகிதாச்சாரம் மாறலாம். அந்த மாற்றமும் எதனால் அமைகிறது என்றால், அது அவர்களுடைய கருமைய தூய்மையையும், தன்மையையும் பொருத்தும் அமைகிறது. இந்த விகிதாச்சார செயல்விளைவு நீதியை சரியான சிந்தனையாலும், தற்சோதனையாலும் இதனை சிறப்பாக புரிந்துகொள்ள முடியும்.

🍁 *இன்றைய பண்புப் பயிற்சி*

🍁 பொறுமை, நிதானம், உற்றுணர்தல், நடுநிலை வகித்தல், தன்னை தானேகண்காணித்தல், விழிப்பு நிலையோடு தன்நிலை உணர்தல், தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல் என்ற இப்பண்புகளால் செயல் விளைவு விகிதாச்சார நீதியை ஐயமே இல்லாமல் உணர்ந்து கொண்டு, வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழ முடியும். வாழ்க வளமுடன்....

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம் 
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்

🍁 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும். 

🍁 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.

🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments