நித்தியக்கடன் பிப்ரவரி 11 2022

🎱🔥🎱🔥🎱🔥🎱🔥🎱🔥🎱

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 11*

🎱🔥🎱🔥🎱🔥🎱🔥🎱🔥🎱

🚥 *இன்றைய நித்தியகடன்*

🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🚥 *இன்றைய சாதகம்*

🚥 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🚥 *இன்றைய நற்சிந்தனை*

🚥 கடவுள் என்ற வார்த்தை பெயர்ச்சொல் அல்ல, இது ஒரு வினைச்சொல். உன்னைக் கடந்து அகம் நோக்கி ஆழமாக செல் என்று குறிப்பு கொடுக்கின்ற வினைச்சொல்லாகும். (கட+உள்) கடந்து உள்ளே செல் என்ற வினைச்சொல்லை நாம் தவறாக புரிந்து கொண்டு, உருவ வழிபாட்டில் இறைவனுக்கு இந்த பெயரை வைத்து வணங்குகிறோம். இறைவனுக்கு இந்தப்பெயர் பொருந்தவே பொருந்தாது. வினைச்சொல் பெயர்ச்சொல்லாக எப்படி தவறாக உணர்த்தப்பட்டு இருக்கிறதோ, இதுபோன்று இறைவனைப் பற்றியும், இறைநிலையையும், அதனுடய இயக்க நீதி இவைகளைப் பற்றியும் நிறைய தகவல்கள் தவறாகவே பதிவிடப்பட்டு விட்டது.

🚥 *இன்றைய தற்சோதனை*

🚥 "ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே" இது சிவவாக்கியரின் வாசகம் எங்கேயோ எதையோ தேடிக்கொண்டு ஓடும்போது, காலத்தை தொலைத்து வாழ்க்கையை இழந்து இறந்து போனவர்களே அதிகம் என்று பதிவிடுகிறார். உங்களுக்கு உள்ளாக அகம் நோக்கி செல்லவேண்டிய இந்த பயணம், புறத்தில் விரிந்து பரந்ததால் ஏற்பட்ட விபத்து, பேரறிவின் வளர்ச்சி இந்த விபத்துக்களில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள பேருதவியாக இருக்கும். தற்சோதனை உங்களுக்குச் சிறந்த தற்காப்பாக அமையும்.

🚥 *இன்றைய பண்புப் பயிற்சி*

🚥 புலன் வழியாக விரிந்துகொண்டே செல்லக்கூடிய அறிவை தவ பயிற்சி மூலம் உயிருக்குள் ஒடுங்க செய்யும்போது, புலன் மயக்கத்தில் இருந்து நாம் சிறுக சிறுக மாற்றம் பெற்று இறைவனை நோக்கி நகர்கின்றோம். இறைவனோடு இணைப்பு கிடைக்கும் போது மனமயக்கம், உணர்ச்சிவயப்படல் இந்த நிலைகளிலிருந்து விடுதலை பெறுகிறோம். இந்த விடுதலைக்கான முதல் படித்தளம் நாள் தவறாமல் தவத்திலும், தற்சோதனையிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பண்பாகும். வாழ்க வளமுடன்...

🚥 *இன்றைய மூலிகை*

🚥 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🚥 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🚥 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🚥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🚥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🚥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🚥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments