🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 08*
🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️
🎲 *இன்றைய நித்தியகடன்*
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎲 *இன்றைய சாதகம்*
🎲 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🎲 *இன்றைய நற்சிந்தனை*
🎲 இறை நிலைக்கு அருகாமையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருந்தபோதும் நாம் ஏன்? இன்பத்திற்கும், துன்பத்திற்கும், பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஒரு நிறைவான வாழ்க்கை என்பது ஏன் அமையவில்லை? என்று கேள்வியை எழுப்பிக் கொண்டு சிந்திப்போமேயானால் அதற்கான விடை உள்ளதை உள்ளவாறு உணர்தல், நல்லதை செய்தல், அல்லதை தவிர்த்தல், புலன்வயப்பட்ட செயல்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளுதல்
🎲 *இன்றைய தற்சோதனை*
🎲 இவைகளை நம் வாழ்க்கையாக அன்றாட நிகழ்வுகளில் இணைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் போது தான் நமக்கும் இறைநிலைக்குமான, இணக்க தன்மை எல்லா வழிமுறைகளிலும் நல்லபடியாக அமையும். இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால், இறைவனை நோக்கி செல்லாமல் இறை நீதியை மதிக்காமல், இறை நீதிக்கு எதிராகவும், இறைவனுக்கு நேர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த காரணத்தால் நமக்கும் இறைவனுக்குமான உறவு, நட்பு நல்ல முறையில் இல்லை.
🎲 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎲 நல்ல பண்பு, எண்ணம், சொல், செயல் இவைகள்தான் நமக்கும் இறைவனுக்குமான இடைவெளியை குறைக்கிறது. சரியான பாதையை அமைத்துக் கொடுக்கிறது. இறைவனுக்கு அருகாமையிலேயே இருந்துகொண்டு நாம் ஏன்? இவ்வளவு சிரமங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கிறோம், என்பதற்கு இவைகள்தான் காரணமாக வந்து நிற்கிறது. புலன் மயக்கத்தில் இருந்தும் நம்மை விடுவித்துக் கொண்டு, விழிப்பு நிலையோடு இயற்கையின் நீதிகளை, கட்டமைப்புகளை, கோட்பாடுகளை மதித்து வாழும் பண்பில் உயர்வோம். நாமும் நம் குடும்பமும். வாழ்க வளமுடன்...
🎲 *இன்றைய மூலிகை*
🎲 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🎲 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🎲 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎲 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎲 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎲 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment