நித்தியக்கடன் பிப்ரவரி 04 2022

💢🌀💢🌀💢🌀💢🌀💢🌀💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 04*

💢🌀💢🌀💢🌀💢🌀💢🌀💢

💐 *இன்றைய நித்தியகடன்*

💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

💐 *இன்றைய சாதகம்*

💐 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
💐 *இன்றைய நற்சிந்தனை*

💐 நம்முடைய அலைபேசியில் சிக்னல் சரி இல்லை என்றாலோ, அல்லது லோபேட்டரி என்றாலோ அதனை சரி செய்வதற்காக பல முயற்சிகளில் இறங்குகின்றோம். அடுத்து என்ன செய்யப் போகிறோமோ என்று கவலைப்படுகிறோம். இந்த அலைபேசி மீது நமக்கு இருக்கும் அக்கறையும், கவனமும் நம்முடைய உடல், உயிர், மனம் இதன்மீது இருக்கிறதா....?

💐 *இன்றைய தற்சோதனை*

💐 உடல்நிலை சரியில்லை என்றால் அவ்வப்போது மருத்துவர்களை அணுகிறோம். அதுவும் அந்த அளவோடு முடிந்துவிடுகிறது. அதனை தாண்டி நிரந்தரமான தீர்வு என்பதை பற்றி நாம் சிந்திப்பதும், செயல்படுவதும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது அறிவின் குறைபாடு என்று மகரிஷி கூறுகிறார்கள். இந்த அறிவின் குறைபாட்டை தற்சோதனை செய்து சமம் செய்து கொள்ள முடியும். சமம் செய்து தான் ஆக வேண்டும். நிறைவாக வாழ இது ஒன்றுதான் வழி.

💐 *இன்றைய பண்புப் பயிற்சி*

💐 நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதனைப் பற்றிய தகவலும், அறிமுகமும் நமக்குள் உள்ளுணர்வாக இயற்கையிலேயே அதிகரிக்கும். இதன் அடிப்படையில் நாம் உடல், உயிர், மனம் இதன் ரகசியங்களை உணர்ந்து கொள்வதற்கு அவைகளை பற்றி சிந்திக்க வேண்டும். ஒரு நாள், அல்லது ஒரு வாரம், அல்லது ஒரு மாதம் முயற்சி செய்தால் மட்டும் வெற்றி கிட்டுமா என்றால், நீண்ட நாள் பிடிக்கும். விடாமுயற்சியோடும், உள்ளார்வத்தோடும் இதில் கலந்துகொண்டு வெற்றி காணவேண்டுயது ஒவ்வொரு தனி மனிதனுடைய பொறுப்பும், கடமையுமாகும். விடாமுயற்சி எனும் பண்பில் வளர்ச்சி பெறுவோம். வாழ்க வளமுடன்..‌.

💐 *இன்றைய மூலிகை*

💐 *நீராவி பிடித்தல்* குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.

💐 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும், 

💐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💐 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments