⭕🎲⭕🎲⭕🎲⭕🎲⭕🎲⭕
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*பிப்ரவரி 02*
⭕🎲⭕🎲⭕🎲⭕🎲⭕🎲⭕
🍃 *இன்றைய நித்தியகடன்*
🍃 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍃 *இன்றைய சாதகம்*
🍃 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍃 *இன்றைய நற்சிந்தனை*
🍃 உங்களுக்கு மிகவும் பிடித்த இடங்களுக்கு அடிக்கடி செல்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகிறீர்கள். இவ்வாறாக பிடித்தது பிடிக்காதது என்ற மனப்பான்மை நம்மிடம் இருக்கும் வரை ஆத்ம தரிசனம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
🍃 *இன்றைய தற்சோதனை*
🍃 ஏன் இந்த விருப்பு வெறுப்புக்குள் நம்மை சிக்கவைத்து கொண்டு நாம் சிதற வேண்டும். சிறப்புமிக்க இறையாற்றலோடு இணைய வேண்டுமானால், நடுநிலையோடு வாழுதல் வேண்டும். மனதை அதற்கு பழக்கப்படுத்துங்கள். தற்சோதனையை பலமாக பயன்படுத்தி விருப்பு, வெறுப்புகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
🍃 *இன்றைய பண்புப் பயிற்சி*
🍃 நடுநிலையாக இருந்து சிந்தித்து வாழும்போது கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கு இறைசக்தி, அருள்பேற்றல் நமக்குள் பெருகுவதை உணரலாம். இந்த நடுநிலை பண்பு தான் நமக்கும் இறைநிலைக்கும் பாலமாக இருக்கிறது. நடுநிலையோடு வாழும்போது நாம் இறைவனை நெருங்குகிறோம். வாழ்க வளமுடன்...
🍃 *இன்றைய மூலிகை*
🍃 *கருஞ்சீரகம்* தேவேயான பொருட்கள், கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🍃 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🍃 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🍃 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🍃 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍃 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍃 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍃 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment