நித்தியக்கடன் மார்ச் 01 2022

🔘🕸️🔘🕸️🔘🕸️🔘🕸️🔘🕸️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*மார்ச் 01*

🔘🕸️🔘🕸️🔘🕸️🔘🕸️🔘🕸️

🎴 *இன்றைய நித்தியகடன்*

🎴 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🎴 *இன்றைய சாதகம்*

🎴 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🎴 *இன்றைய நற்சிந்தனை*

🎴 நம்முடைய எல்லா வகையான செயல்களையும், நிதானமாகவும், அமைதியாகவும் இருக்கும்படி கவனத்தோடு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிதானமான அமைதியான பழக்கம் எதற்காக என்றால் உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் நம்மை ஆழமாக அழைத்துச் செல்வதற்கு பேருதவியாக இருக்கும். தவத்தின் போது மட்டும் அமைதியாக ஆழ்ந்து செல்ல முயற்சிப்பது ஒரு வேடிக்கையான நாடகம். மற்ற எல்லா வகையிலும் நாம் நம்மை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளும்போது மட்டும்தான் தவத்தில் ஆழ்ந்து செல்லமுடியும். அந்த பழக்கப் பதிவு சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

🎴 *இன்றைய தற்சோதனை*

🎴 நம்முடைய பழக்கவழக்கங்கள் ஒரு புரிதலோடும், தெளிவான சிந்தனையோடும் இருக்கும்படி அமைந்ததுக் கொள்ளவதும், நாம் திட்டமிட்டு நம் செயல்களை ஒழுங்குமுறை படுத்திக் கொள்ளவதும் மிகவும் அவசியம். ஆன்மீக உயர்வுக்கு தகுந்த பழக்கவழக்கங்கள் அவைகள் தான். இதனை நன்றாக தற்சோதனை செய்து நமதாக்கி கொள்வோம். 

🎴 *இன்றைய பண்புப் பயிற்சி*

🎴 ஆளுமை பண்பில் நமக்குள்ளாக வளரும்போதுதான் உயர்ந்ததொரு ஆன்மீக வாழ்க்கை நமக்கு அமைகிறது. இந்த ஆன்மீக ஆளுமை பண்பு நம்மை நாமே ஆட்சி செய்வது, நெறியோடும், முறையோடும் வாழ்வது. இந்த நல்லதொரு பண்பே ஆன்மீக அறிவுக்கு உகந்த பண்பாகும். வாழ்க வளமுடன்...

🎴 *இன்றைய மூலிகை*

🎴 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🎴 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🎴 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎴 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎴 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎴 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments