💐👣💐👣💐👣💐👣💐👣💐
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 31*
💐👣💐👣💐👣💐👣💐👣💐
💢 *இன்றைய நித்தியகடன்*
💢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💢 *இன்றைய சாதகம்*
💢 திங்கட்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
💢 *இன்றைய நற்சிந்தனை*
💢 "தான் மயங்கியும், பிறரை மயக்கியும் வாழும் மனநிலையிலிருந்து மனிதர்கள் தங்களை தாங்களே விடுவித்துக் கொள்ள வேண்டும்" *அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி* இந்த வாசகங்களை தெள்ளத்தெளிவாக பயன்படுத்துகிறார்கள். நாம் எதில் மயங்குகிறோமோ, அதில் மற்றவர்களையும் மயக்க நினைப்போம். இதுதான் *மனோதத்துவம்* அது மட்டுமின்றி இதுவும் ஒரு வகையான சமுதாயக் குற்றம். இந்த உண்மையை உணர்ந்ததால் தான் ஆசான் அவர்கள் இந்த வாசகங்களை நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.
💢 *இன்றைய தற்சோதனை*
💢 படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பலரும் பாராட்டுவதற்காக மகரிஷி ஒரு நாளும், ஒரு பொழுதும் எந்த ஒரு வாசகத்தையும் பயன்படுத்தியது கிடையாது. ஒவ்வொரு மனிதனும் இன்னல்களிலிருந்தும், இடர்பாடு களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தன்னை தானே விடுவித்துக் கொள்வதற்கான வழிமுறைகளைத்தான் தெள்ளத்தெளிவாக, தானும் வாழ்ந்து காட்டி அதில் நாமும் வாழ இந்த பயிற்சி முறை கொடுத்திருக்கிறார். இதில் தற்சோதனை மிகவும் உயர்ந்ததும், சிறந்ததுமாகும்.
💢 *இன்றைய பண்புப் பயிற்சி*
💢 இறைநிலையையும், வாழ்வியலையும் புரிந்துகொள்ள எதார்த்தமான சிந்தனையும், செயலும், அதற்கேற்ற பண்பும் மிகவும் முக்கியம். நீங்கள் எந்த அளவுக்கு எளிமையோடும், இன்முகத்தோடும், வாழ்கிறீர்களோ, அந்த அளவுக்கு ஆசானை நெருங்க முடியும். வேதாத்திரி மகரிஷி மட்டும் அல்ல நமக்கு ஆசான். தன்னிலை உணர்ந்த அத்தனை ஞானிகளும் மகரிஷிகளும் நமக்கு ஆசானாக இருந்து நம்மை வழி நடத்துகிறார்கள். இந்த உண்மையை உணர்வதற்கு அந்த நுண்மையான நிலைக்கு மனதை கொண்டு செல்ல வேண்டும். எளிமையோடும், இன்முகத்தோடும், எதார்த்தத்தோடும் வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
💢 *இன்றைய மூலிகை*
💢 *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
💢 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
💢 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
💢 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💢 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💢 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💢 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment