⭕🔶⭕🔶⭕🔶⭕🔶⭕🔶⭕
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 29*
⭕🔶⭕🔶⭕🔶⭕🔶⭕🔶⭕
🅾️ *இன்றைய நித்தியகடன்*
🅾️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🅾️ *இன்றைய சாதகம்*
🅾️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🅾️ *இன்றைய நற்சிந்தனை*
🅾️ ஒரு பள்ளி ஆசிரியருக்கு தான் கற்றுக் கொடுக்கும் பாடங்களை சரியாக புரிந்துகொண்டு நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மிகவும் பிடிக்கும். அதுமற்றுமின்றி நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கும் ஆசிரியருக்குமான நட்பு சிறப்பாகவே இருக்கும். கவனக்குறைவான, முயற்சி போதாத மாணவர்களையும் வெற்றி பெறச்செய்ய ஆசிரியர்கள் (இறைவன்) முயற்சி செய்வார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவர்கள் மீதும் சிறப்பு கவனம் வைத்து நல்ல மதிப்பெண் எடுக்க உதவி செய்வார்கள். ஆனால் அனுகுமுறையும், நட்பும் வேறுவேறாக இருக்கும்.
🅾️ *இன்றைய தற்சோதனை*
🅾️ இதுபோலவே இறைவன் அறிவாக இருந்து சொல்வதையெல்லாம் கேட்கும் மனிதர்களுக்கும், இறைவனுக்குமான நட்பு சிறப்பாகவே இருக்கும். இது எதனால் அமைந்தது. ஆசிரியர் இடத்தில் (இறைவனிடம்) எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஆனால் கற்றுக்கொள்ளும் மாணவர்களுடைய திறமை, அறிவு, செயல்திறன், கவனித்தல், நினைவாற்றலுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளல். இதுவே மாணவர்கள் சிறப்பாக மதிப்பெண் எடுக்க காரணமாக அமைகிறது. இதுபோன்று நாமும் நமக்கும், இறைவனுக்குமான நட்பை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தற்சோதனை இதற்கான நட்பு பாலத்தை உருவாக்கும்.
🅾️ *இன்றைய பண்புப் பயிற்சி*
🅾️ "கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனிதன் போன பாதையை மறந்து போகலாமா" இந்த வரிகள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம் நம்மை நாம் திருத்திக் கொண்டு எதனை செய்ய வேண்டுமோ, அதை செய்து எதனிடமிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டுமோ, அதனிடமிருந்து நாம் விலக்கிக் கொள்ளும் இப்பண்பில் நாளுக்கு நாள் சிறந்து விளங்குவோமாக வாழ்க வளமுடன்...
🅾️ *இன்றைய மூலிகை*
🅾️ எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும். இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.
🅾️ பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.
🅾️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🅾️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🅾️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment