⚾⛳⚾⛳⚾⛳⚾⛳⚾⛳⚾
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 20*
⚾⛳⚾⛳⚾⛳⚾⛳⚾⛳⚾
🌐 *இன்றைய நித்தியகடன்*
🌐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌐 *இன்றைய சாதகம்*
🌐 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌐 *இன்றைய நற்சிந்தனை*
🌐 இறைநிலையின் நீண்ட நெடிய தன்மாற்ற சரித்திரத்தில் நமக்கு அமைந்திருக்கும் வாய்ப்புகள் எல்லாம் மிகவும் அற்புதமானவை அதற்கான முயற்சியில் நாம் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதுதான் உண்மை இந்த பேரியக்க மண்டலத்தில் இருக்கக்கூடிய எதனோடும் நம்மால் இணைய முடியும் இணைந்து அதற்கும் நமக்குமான நட்பை உறவை உயர்த்திக் கொள்ள முடியும் அவைகளுக்கும் நமக்குமான இடைப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய உற்பத்தி ரகசியங்கள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும் எந்த ஒரு மயக்கமும் இல்லாமல் இந்த பிரபஞ்ச உண்மைகளை பற்றி தெளிவாக உணர்ந்துகொண்டு உலகத்தாருக்கு எடுத்துரைக்க முடியும் இதற்கு தேவையானவை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் தகுதி உயர்வு.
🌐 *இன்றைய தற்சோதனை*
🌐 உடல் உயிர் மனம் இந்த மூன்றின் உடைய தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் முழுமையான உடல் தகுதி உயிர் தகுதி மனத் தகுதி அமைத்துக் கொண்டால் பிரபஞ்ச பேருண்மைகள் அனைத்தையும் நாம் சந்தேகம் இல்லாமல் பயம் இல்லாமல் தெள்ளத் தெளிவாக உணர முடியும் கண்களுக்கு புலப்படாத உண்மைகளை உணர்ந்து தெளிவு பெற முடியும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே போராடாமல் அமைதியோடும் பேரின்பத்தோடும் வாழமுடியும். பாதங்களுக்கு கீழாக இருக்கக்கூடிய மண்ணிலிருந்து தலைக்கு மேலே இருக்கக்கூடிய விண் வரை அனைத்து விதமான இயக்கங்களையும் அதன் உற்பத்தி இரகசியங்களையும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.
🌐 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌐 இவை அனைத்தையும் நமக்குள் நடத்திக் கொள்வதற்கு பண்புகள் நம்முள் உயர்ந்தோங்கி வளரவேண்டும் இந்த பண்புகள் தான் நமக்கான தளத்தை உருவாக்கி தருகின்றன விட்டுக் கொடுத்தல் சகிப்புத்தன்மை தியாகம் உள்ளதை உள்ளவாறு உணர்தல் அதை தவிர்த்தல் நல்லது செய்தல் தனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லது நினைப்பதும் செய்வதும் நித்திய கடன் என்ற பண்புகளை எல்லாம் நமக்குள் ஆழமாக வேரூன்றச் செய்துகொண்டு புறத்தில் அதற்கான செயல்களை எல்லாம் செய்யும் போது பிரபஞ்சமும் நாமும் வேறு வேறு அல்ல நாமே பிரபஞ்சம் பிரபஞ்சமே நான் என்ற உண்மை தெளிவாகப் புரிந்துவிடும் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு புண்ணிய நிலைகளில் பயணிப்போம் நாமும் நம் குடும்பமும் நலமுற வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌐 *இன்றைய மூலிகை*
🌐 *இஞ்சி+தேன்* தேவையான பொருட்கள், இஞ்சி 4 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌐 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌐 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🌐 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌐 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment