🎴🎱🎴🎱🎴🎱🎴🎱🎴🎱🎴
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 19*
🎴🎱🎴🎱🎴🎱🎴🎱🎴🎱🎴
🔥 *இன்றைய நித்தியகடன்*
🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔥 *இன்றைய சாதகம்*
🔥 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔥 *இன்றைய நற்சிந்தனை*
🔥 "நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ், இன்பமும் துன்பமும் உங்கள் சாய்ஸ்" வாழ்க்கை முறை இப்படித்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டமைப்பு முறையை எவரொருவர் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு வாழ்க்கை நிம்மதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த கோட்பாட்டை எவரொருவர் மீறுகிறாரோ அவர்கள் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையில் போராடுகிறார்கள். உங்களுடைய வாழ்க்கை உங்கள் வசம் தான் இருக்கிறது.இது உங்களுடைய சாய்ஸ்
🔥 *இன்றைய தற்சோதனை*
🔥 இந்த வாழ்க்கை எதை வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எதனுடைய அடிப்படையில் இது அமைந்திருக்கிறது சிந்தித்துப்பாருங்கள். எப்போதும் உங்களை மிகுந்த கவனத்துடன் ஆராய்ச்சியோடு வைத்திருந்து பழகுங்கள். ஏனெனில் வாழ்க்கைனுடைய நுட்பங்களை புரிந்துகொள்ளவும், அதனுடைய விளைவுகளை அறிந்து கொள்ளவும் தற்சோதனை தேவைப்படுகிறது.
🔥 *இன்றைய பண்புப் பயிற்சி*
🔥 வாழ்க்கை ஒன்றும் புரியாத புதிர் அல்ல. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையோடும், எதார்த்த்தோடும், இருக்கிறீர்களோ கீழ்வரும் பண்புகளை உடன் சேர்த்துக்கொண்டு வாழும்போது எல்லாம் வெளிச்சமாகவே உணரப்படும். அயரா விழிப்பு நிலை, திட்டமிட்டல், தற்சோதனை இந்த பண்பில் நீங்கள் சிறந்து விளங்கும் போது தான் உங்களுக்கு உங்கள் வாழ்க்கை அறிமுகமாகும். அதுவரை அது ஒரு மாயை ஆகவே உங்களுக்குள் ஒளிந்து விளையாடும். அயரா விழிப்பு நிலையோடும், தற்சோதனையோடும், திட்டமிட்டு வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...
🔥 *இன்றைய மூலிகை*
🔥 *கருஞ்சீரகம்* தேவேயான பொருட்கள், கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🔥 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🔥 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🔥 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🔥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment