⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 16*
⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️🔮⚙️
🌍 *இன்றைய நித்தியகடன்*
🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌍 *இன்றைய சாதகம்*
🌍 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌍 *இன்றைய நற்சிந்தனை*
🌍 உங்களைத் தாண்டி, கடந்து உங்களுக்கான வாய்ப்புகளில் வாழ முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் என்ன என்பதைப் பற்றி நாளைய பதிவில் நாம் சிந்திப்போம்... இன்று நம்மை நாம் கடந்து எப்படி செல்வது? இந்த கேள்வியை எழுப்பிக்க கொண்டு அதற்கான தேடலில் பயணிப்போம். முதலில் நாம் எந்த நிலையில் இப்போது இருக்கின்றோம் என்பதை தெளிவாக உணர்ந்து விட்டால், இதிலிருந்து நம்மை கடந்து செல்வது எப்படி? என்பதை பற்றி சுலபமான வழிமுறைகளை கண்டுவிடலாம்...
🌍 *இன்றைய தற்சோதனை*
🌍 இறைநிலையின் தன்மாற்ற சரித்திரப் பதிவுகள் ஒட்டு மொத்தமாக நம் கருமையத்துக்குள் இருப்பாக இருக்கிறது. இந்த பதிவுகளின் வெளிப்பாடாகத்தான் நம்முடைய தேவைகளும், தேடல்களும் உருவாகின்றன. இதன் விளைவாக அன்றாட வாழ்க்கையில் நாம் பெரிய பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். விலங்குகளின் வித்துத் தெடராகத் தான் நாம் இந்த மனித நிலைக்கு வந்திருக்கிறோம். எல்லாவிதமான விலங்குகளும் புலன்களுக்கு உட்பட்டு தான் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
🌍 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌍 இதிலிருந்து நாம் மாறுபட்டு புலன்களை கடக்க வேண்டும், விலங்கிப் பதிவுகளை கடக்க வேண்டும். இவைகளையெல்லாம் கடப்பதற்கு முறையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்தி காலத்தால் மெதுவாக, இப்பொருந்தாப் பதிவுகளை விட்டு விலக விலக புலன்களை கடக்க முடியும். புதிய பதிவுகளை ஏற்படுத்திக்கொண்டு இதனுடைய விகிதாச்சாரத்தை அதிகரித்துக் கொண்டு, நம்முடைய கடமையாக இதை தற்போது எண்ணி நிறைவாக செய்து கொண்டே வர வேண்டும். எதிர்காலத்தில் இந்த மேல் பதிவுகள் ஞானத்தின் திறவு கோலாக உருமாறி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும். அதுவே நம்மை ஞானத்தை நோக்கி அழைத்து செல்லவும் போகிறது. வாழ்க வளமுடன்...
🌍 *இன்றைய மூலிகை*
🌍 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🌍 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌍 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment