நித்தியக்கடன் ஜனவரி 13 2022

⛳🎲⛳🎲⛳🎲⛳🎲⛳🎲⛳

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 13*

⛳🎲⛳🎲⛳🎲⛳🎲⛳🎲⛳

🌌 *இன்றைய நித்தியகடன்*

🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌌 *இன்றைய சாதகம்*

🌌 வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
🌌 *இன்றைய நற்சிந்தனை*

🌌 வேறு வேறு குணங்களோடும் தன்மைகளோடும் பிரிந்து இயங்கிக் கொண்டே இருந்தால், ஒன்றுக்கு ஒன்று நல்ல புரிதலும், நட்பும், இணக்க தன்மையும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. நம் உடலில் இருக்கக்கூடிய ஏழு தாதுக்களும், நம் சூரிய குடும்பத்திலுள்ள ஏழு கோள்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இவைகளுக்கு இடையே முரண்பாடான இயக்கங்கள் இருந்தாலும், அவை நீடித்தாலும், அவ்வப்போது வந்து வந்து போனாலும் இவையனைத்தும் நம்முடைய உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக மனவளமும் சீர்குலைத்து விடும், நம்முடைய வாழ்க்கையும் பெரும் சிக்கலாகி விடும்.

🌌 *இன்றைய தற்சோதனை*

🌌 உடலுக்கும் உயிருக்கும், உயிருக்கும் மனதிற்கும், தனக்கும் சமுதாயத்திற்கும், தனக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கக்கூடிய இனிமையை காத்துக்கொள்வது, மனிதர்களுடைய முதல் கடமையாகும். இந்த இனிமைக்கு பெயர்தான் ஒழுக்க நெறி. இந்தக் கடமையிலிருந்து எவரொருவர் விலகினாலும் அதன் விளைவு பெரும் துன்பமும் சிக்கலும் வாழ்க்கையில் சந்திக்கும் விதமாக அமைந்து விடுகிறது. இந்த நான்கிற்குமான இனிமையை காத்துக் கொண்டாலே, வாழ்க்கையின் எல்லா விதமான நன்மைகளும் வெற்றியும் நம்முடையதாக மலர்ச்சி பெரும். குண்டலினி யோகம் என்பது இந்த நான்கையும் சீராக பராமரித்து பாதுகாத்தலே ஆகும்.

🌌 *இன்றைய பண்புப்பயிற்சி*

🌌 வேறு எதை எதையோ கற்பனை செய்து கொண்டு, அது தான் வாழ்க்கை என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு இருக்கும் வரை, உங்களோடு இணைந்து இருக்கும் உண்மையை உங்களுக்குள் இருக்கக்கூடிய, தெய்வீகத் தன்மையை புரிந்து கொள்ளாமல், உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கையை மேலும் மேலும் கற்பனையை நோக்கி நகர்த்தி ஏன்? சிக்கலாக்கி கொள்ள வேண்டும். இயற்கைக்கும் நமக்கும் இடையே இனிமையை காக்க முயற்சி செய்யுங்கள். அதுவே எல்லாவற்றுக்குமான தீர்வாக அமையும், போராட்டமான வாழ்க்கையிலிருந்து பொருத்தமான வாழ்க்கைக்கு நம்மை உயர்த்திக் கொள்வோம். வாழ்க வளமுடன்...

🌌 *இன்றைய மூலிகை*

🌌 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

🌌 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

🌌 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌌 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌌 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌌 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments