🍒🌐🍒🌐🍒🌐🍒🌐🍒🌐🍒
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 11*
🍒🌐🍒🌐🍒🌐🍒🌐🍒🌐🍒
🔶 *இன்றைய நித்தியகடன்*
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 *இன்றைய சாதகம்*
🔶 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🔶 *இன்றைய நற்சிந்தனை*
🔶 பழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையே போராடும் இந்த நிலைமையை மாற்றியமைக்க நாம் ஒரு பழக்கத்தை புதியதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் "புதியதோர் பண்பாடு" நமக்கு கொடுக்கப்பட்ட அனைத்து விளக்கங்களையும் வாழ்க்கைக்குள் நிறைத்து, வாழ்க்கையாகவே மாற்றி அமைத்து புதியதாக ஒரு பழக்கத்தை உருவாக்கிக் கொண்டு, அதன் வழியாக யோகநெறி வாழ்க்கையை முழுமையாய் வாழதுவங்குவோம்.
🔶 *இன்றைய தற்சோதனை*
🔶 தவத்தின் வழியாகவும், தற்சோதனை வழியாகவும், பயிற்சிகள் மூலமாகவும் இந்த புதியதோர் பண்பாட்டை உருவாக்கிக் கொள்வோம். புதிய பழக்கங்களை உருவாக்கிக் கொண்டு படிப்படியாய் முன்னேற்றம் காண்போம். ஈடு இணையில்லாத இந்த பயிற்சி முறையை நாம் உளமாற ஏற்று நம்பிக்கையோடு முயற்சி செய்யும் போது, அதன் விளைவு சீராக நம் மூளை செல்களில் கருமையத்தில் காந்த தத்துவமாய் வளர்ச்சி பெறும்.
🔶 *இன்றைய பண்புப்பயிற்சி*
🔶 எண்ணங்களை ஆய்வுசெய்து, ஆசைகளைச் சீரமைத்து, சினத்தை தவிர்த்து, கவலையை ஒழித்து மனதை நிலைக்கச் செய்து தவத்தின் வழியாக சுத்தவெளிக்கும், பேரியக்க மண்டலத்திற்கும், சூரிய குடும்பத்திற்கும் அடிக்கடி சென்று பழகி ஆழ்ந்து ஒடுங்கி அதுவாகி ஒன்றி கலந்து, மீண்டும் மீண்டும் இது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள, நமக்கும் இப்பிரபஞ்சத்திற்குமான புரிதலாலும், நட்பினாலும், இணக்கத் தன்மையாலும் புதியதொரு பண்பாடு வளர்ச்சி பெறும். காந்த ஞானயோக வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு வாழ்வோம் நாமும் நம் குடும்பமும். வாழ்க வளமுடன்...
🔶 *இன்றைய மூலிகை*
🔶 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🔶 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🔶 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔶 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔶 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔶 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment