🕳️♾️🕳️♾️🕳️♾️🕳️♾️🕳️♾️🕳️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 09*
🕳️♾️🕳️♾️🕳️♾️🕳️♾️🕳️♾️🕳️
🔘 *இன்றைய நித்தியகடன்*
🔘 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔘 *இன்றைய சாதகம்*
🔘 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🔘 *இன்றைய நற்சிந்தனை*
🔘 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி மனித சரீரத்தில் தலைப்பகுதி தெற்குப் பகுதியாகவும், கால்பகுதி வடக்குப் பகுதியாகவும் அமைந்துள்ளதால் குண்டலினி யோகத்தில் மேல் நோக்கு தவம் இயற்று பவர்களை தென்புலத்தார் என்பார்கள். தென்னாடுடையசிவன் சிரசு பகுதியில் இருக்கும் இறைவன்.
🔘 *இன்றைய தற்சோதனை*
🔘 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, எந்தநோக்கம் உடையவருக்கும் இறைவனாய் இருப்பவன், நல்லோருக்கும் தீயோருக்கும் அவன் ஒருவனை இறைவனாவான். அங்கிங்கெனாதபடி இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பொருளாவான் இறைவன். இறைத் தன்மை வேறுபட்டு இருப்பதையும், மாறுபட்டு இயங்குவதையும் தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.
🔘 *இன்றைய பண்பும் பயிற்சி*
🔘 இறைவனே அனைத்துமாக தன்மாற்றம் பெற்றுள்ளான் என்பதை உணரவேண்டுமானால். நமக்குள் இணக்கத்தன்மை பெருக்கெடுக்க வேண்டும். மனம் பிளவுபட்ட தன்மையிலிருந்து ஒருங்கிணைப்பு பெற்று தனது சுயத்தன்மையில் இயங்க வேண்டும் எந்த ஒன்றோடும் எதிர்மறை தன்மை இல்லாமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லாவற்றோடும் இணைந்து இணக்கமாக வாழும் பண்பில் உயர வேண்டும் இணக்கத் தன்மை மிக, மிக அவசியம், இறைவனை உணர. வாழ்க வளமுடன்...
🔘 *இன்றைய மூலிகை*
🔘 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு
🔘 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.
🔘 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔘 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔘 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔘 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment