🎲🌿🎲🌿🎲🌿🎲🌿🎲🌿🎲
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியக்கடன்*
*ஜனவரி 08*
🎲🌿🎲🌿🎲🌿🎲🌿🎲🌿🎲
💢 *இன்றைய நித்தியகடன்*
💢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💢 *இன்றைய சாதகம்*
💢 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
💢 *இன்றைய நற்சிந்தனை*
💢 ஒரு மரத்தின் உச்சி முதல் அடிவேர்பகுதி வரை scan செய்து பார்த்தால் அது இப்படித்தான் இருக்கும். ஒரு மரத்தினுடைய வெளிப்புறத்தில் கிளைகளும், இலைகளும் எந்த அளவு படர்ந்து வளர்ந்திருக்கிறதோ, அதே அளவு பூமியின் அடிப்பகுதியில் அதன் வேர் படர்ந்தும் விரிந்தும் வளர்ந்து இருக்கும். அது ஒரு கோள வடிவில் காட்சிதரும். இது மட்டும் அல்ல, இந்த பிரபஞ்சத்தில் எல்லா இயக்கமும் கோள வடிவில் தான் அமைந்திருக்கிறது. ஏன் என்றால் இறைத்துகள் கோள வடிவில் அமைந்து இயங்குகிறது ஆகவே அதனால் ஆக்கப்பட்ட இப்பிரபஞ்சமும் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கோளவடிவில் தான் அமையமுடியும்.
💢 *இன்றைய தற்சோதனை*
💢 இறைநிலையின் சூழ்ந்தழுத்தும் ஆற்றல் இறைதுகள்களை ஒரு கோள வடிவிலேயே ஒருங்கிணைத்து இயக்குகிறது. பருவுடல் உட்பட பல்வேறு தோற்றப் பொருட்கள் வேறு வடிவில் இருந்தாலும் புறத்தோற்றங்களோடு ஒப்பிடும் போது இப்பிரபஞ்சத்தில் இருந்தாலும் உயிரியக்கமும் காந்த இயக்கமும் கோள வடிவில் தான் இயங்குகிறது. இது இறைதுகளோடும் அதனுடைய இயக்க ஒழுங்கு அமைப்போடும் ஒத்துப்போகும் இறைநீதியாகும். விஞ்ஞான மெய்ஞான சிந்தனையோடு தற்சோதனை செய்து நம்பிக்கை, தெளிவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
💢 *இன்றைய பண்புப் பயிற்சி*
💢 நமக்கு சந்தேகம் இருக்கக்கூடிய எந்த ஒன்றிலும் முழு நம்பிக்கை ஏற்படாது. முழு நம்பிக்கையோடு இந்த பிரபஞ்ச உண்மைகளை உயிரின், காந்தத்தின், மனதின் உண்மைகளை உணரக்கூடிய பண்புதான் சிந்தனை பண்பாகும். ஏன்? எதற்கு? எதனால்? எப்படி? என்று அனைத்தையும் ஆராய்ச்சி செய்யும் பண்பை மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பண்பிற்கு பின்னால்தான் உங்களுடைய வாழ்க்கை முழுமையாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கான வாழ்க்கையில் வளமோடும், நலமோடும் நீங்கள் நீங்களாய் இருந்து நீங்கள் வாழ்வீர்களாக. வாழ்க வளமுடன்...
💢 *இன்றைய மூலிகை*
💢 எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும். இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.
💢 பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.
💢 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💢 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💢 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment