💢🎱💢🎱💢🎱💢🎱💢🎱💢
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 30*
💢🎱💢🎱💢🎱💢🎱💢🎱💢
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 உலோகங்களாக நாம் வெளியில் பார்க்கக்கூடிய இரும்பு, தங்கம், செம்பு, வெள்ளி இந்த பொருள்கள் அனைத்தும் நம் உடலுக்குள் சத்துக்களாக இருக்கின்றன. தங்க சத்து, வெள்ளி சத்து, செம்பு சத்து, இரும்பு சத்து என்று அத்தனையும் நம் உடலுக்குள் சத்துக்களாக இருக்கிறது. இந்த பூமியில் 72% விழுக்காடு நீர் சூழ்ந்து இருக்கிறது. நம் உடலுக்குள் 72% விழுக்காடு ரத்தம் இருக்கிறது. இதையெல்லாம் வைத்து சிந்திக்கும்போது ஒரு உண்மை நமக்கு புரிகிறது அது என்னவெனில்.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 இயற்கைக்கும் நமக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது. இயற்கை வேறு நாம் வேறு அல்ல. இயற்கைக்கு எதிராக நம்மிடம் செயல் பழக்கங்கள் இருக்கும் என்றால், அதுதான் நமக்கு உடலில் நோயாகவும், மனதில் பொருந்தா உணர்வாகவும், துன்பமாகவும் வெளிப்படுகிறது. நம்முடைய எண்ணம் சொல் செயல் இவைகளில் இந்த முரண்பாடுகள் இருக்கும் என்றால் மீண்டும் மீண்டும் அது நம்முடைய வாழ்க்கை சிக்கலாக உருவாகிக்கொண்டே இருக்கும் இந்த முரண்பாடுகளை எல்லாம் தற்சோதனை செய்து சமம் செய்து கொள்ள வேண்டும்.
🍁 *இன்றைய பண்புப் பயிற்சி*
🍁 நம்மால் ஆளுமை செலுத்த முடிகிறது என்ற ஒரே காரணத்திற்காக, நாம் ஒன்றும் அவ்வளவு பெரிய நபர் கிடையாது. மனிதர்களால் முடியாது என்று எதுவுமே கிடையாது. அதற்காக நம்மை பெரியதாக சிந்தித்து கொள்ள கூடாது. எளிமையோடும், இன்முகத்தோடும் வாழும் பண்பில் அனைத்தையும் அரவணைத்துக் கொள்ள வேண்டும். "ஒழுக்கத்தால் உலகையே நட்பு கொள்ளும் அன்பு நெறி விளங்க வைத்து" இந்த நெறியில் இந்த பண்பில் சிறந்து விளங்குவோமாக. வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *இஞ்சி+தேன்* தேவையான பொருட்கள், இஞ்சி 4 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🍁 செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🍁 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment