நித்தியகடன் டிசம்பர் 29 2021

♦️🌿♦️🌿♦️🌿♦️🌿♦️🌿♦️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 29*

♦️🌿♦️🌿♦️🌿♦️🌿♦️🌿♦️

♻️ *இன்றைய நித்தியகடன்*

♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

♻️ *இன்றைய சாதகம்*

♻️ புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
♻️ *இன்றைய நற்சிந்தனை*

♻️ இது நாள் வரை இம்மண்ணுலகில் மனிதர்கள் வாழ்ந்து பழகிய பழக்கவழக்கங்களில் தேவையானவைகள், தேவை இல்லாதவைகள், மறக்க வேண்டியவைகள், மறக்கக் கூடாதவைகள் என இரண்டுமே இருக்கின்றன. இவைகளை பகுத்து பிரித்து உணர்ந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும், முயற்சித்தால் மட்டுமே நம்மால் சாதிக்கமுடியும். இவைகளில் மறக்கக்கூடாததை மறந்து விட்டாலும் துன்பம், மறக்க வேண்டியதை மறக்காமல் நினைவில் வைத்திருந்தாலும் துன்பம். எப்படி இவைகளை பிரித்து உணர்வது, மறக்க வேண்டியவை, மறக்கக் கூடாதவை என சிந்திப்போம்... 

♻️ *இன்றைய தற்சோதனை*

♻️ எதைப் பயன்படுத்தி நாம் பிரித்துணர்வது என்று சிந்தித்தால் நம் மனதை பயன்படுத்தி தான் உணர வேண்டும். மூளைப் பகுதியில் உள்ள எல்லா சிற்றரைகளையும் இயக்கமடையச் செய்து கொண்டு அப்படி மனதை பயன் படுத்துவதற்கு முன்னதாக, மனதை பண்படுத்தும் முயற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். செய்க தவம் செய்க தவம் நன்நெஞ்சே செய்க தவம் மனவளக்கலை பயிற்சிகளை மேற்கொள்ளும் போது நம்முடைய மனமானது பக்குவப்பட்ட நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும். இந்த முதிர்ச்சியான மனோநிலையில் நம்மால் எடுக்கப்படும் முடிவுகள் நலமாகவும், இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

♻️ *இன்றைய பண்புப்பயிற்சி*

♻️ பல்வேறு வடிவங்களில் இந்த மனவளக்கலை பயிற்சிகள் நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் என்று தனித்தனியாக பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மூன்றிலும் நம்மை நாம் பக்குவப்படுத்தினால் தான் நம்மிடம் இருக்கக்கூடிய பழக்கவழக்கங்களில் தேவையானவைகளுக்கு, படிகட்டவும் தேவை இல்லாதவைகளை வடிகட்டவும், முடியும் பயிற்சியோடு நம்மை விளக்கத்தோடு இணைத்துக் கொண்டு வாழ்க்கையை விழிப்பு நிலையோடும் விளக்கத்தொடும் வாழ்வோம். பிரித்துணரும் மனப்பக்குவத்தில் உயர்வோம். நாம் நாமக்கான வாழ்வை வாழ்வோம். வாழ்க வளமுடன்...

♻️ *இன்றைய மூலிகை*

♻️ *கருஞ்சீரகம்* தேவேயான பொருட்கள், கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

♻️ மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

♻️ தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

♻️ நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

♻️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♻️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♻️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments