நித்தியகடன் டிசம்பர் 26 2021

🔶🎲🔶🎲🔶🎲🔶🎲🔶🎲🔶

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 26*

🔶🎲🔶🎲🔶🎲🔶🎲🔶🎲🔶

🔳 *இன்றைய நித்தியகடன்*

🔳 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔳 *இன்றைய சாதகம்*

🔳 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🔳 *இன்றைய நற்சிந்தனை*

🔳 ஓடுபாதையை விட்டு ஒரு வாகனம் கீழே இறங்கி விட்டால் அதனுடைய விளைவு சொல்ல முடியாத விபத்தாக அமைகிறது. ஒரு வாகனம் ஓடு பாதையில் தான் பயணிக்க வேண்டும். அப்போதுதான் அந்த பயணம் இனிமையாகவும், அமைதியாகவும் அமையும். இது போன்று தான் மனம் அறிவு என்ற ஓடுபாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும். அறிவை விட்டு எப்போதெல்லாம் விலகி சிந்தித்து, செயல்பட்டு விடிகிறதோ அப்போதெல்லாம் விபத்துக்கள் தான் நேரிடுகிறது, துன்பங்களே உருவாகிறது. அதைவிட்டு எப்போதும் விலகாது மனதை பயன்படுத்துவோம்.

🔳 *இன்றைய தற்சோதனை*

🔳 விபத்துக்கள் இல்லாது ஒரு பயணத்தை இனிமையாக அமைத்துக் கொள்ள வேண்டுமானால், ஓட்டுனருக்கும், வாகனத்திற்கும், சாலைக்கும் இதில் பெரிய பங்கு உண்டு. தடுமாற்றம் இல்லாத போதும், வாகனத்தை நல்ல முறையில் வைத்திருக்கும் போதும், சாலைகள் நல்ல முறையில் இருக்கும் போதும் விபத்துக்கள் நேரிடுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. தெளிந்த மனதோடு இதனை நன்றாக தற்சோதனை செய்யுங்கள். மனதிலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. அந்த விபத்துக்களில் இருந்து நீங்கள் தான் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

🔳 *இன்றைய பண்புப் பயிற்சி*

🔳 எண்ண மோதல்கள் மனவிபத்துக்கள் இல்லாமல் வாழ்க்கையை சீரான முறையில் இயக்கி பழக்க வேண்டும். பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், பொறாமை, போட்டி, பகைமை அறியாமை, அலச்சியம், நாகரிகமின்மை இவையெல்லாம் மன விபத்துக்கள். மனதை இவைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பண்பில் விழிப்பு நிலையோடு இருந்து உயர்வோமாக. காலை மாலை பயிற்சிகள் நாள் தவறாமல் செய்து வர படிப்படியாக அனைத்தும் ஒழுங்கு நிலையில் உயரும். வாழ்க வளமுடன்..!

🔳 *இன்றைய மூலிகை*

🔳 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🔳 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🔳 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔳 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔳 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔳 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments