🚥🌀🚥🌀🚥🌀🚥🌀🚥🌀🚥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 25*
🚥🌀🚥🌀🚥🌀🚥🌀🚥🌀🚥
❄️ *இன்றைய நித்தியகடன்*
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ *இன்றைய சாதகம்*
❄️ சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
❄️ *இன்றைய நற்சிந்தனை*
❄️ உடல் முழுவதையும் தளர்த்தி கொள்வோம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம், காந்த ஓட்டம் இவைகள்யாவும் சீராக இயங்கட்டும். உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் போதிய வலுவும் ஆற்றலும் பெருகட்டும். பெருகிக்கொண்டே இருக்கின்றன வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்... வாழ்க வளமுடன்... வலுவும் ஆற்றலும் பெருகிவிட்டன ஓய்வு ஓய்வு ஓய்வு. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் என்ன என்பதை உணர்ந்து கொள்வோம். மனதிற்கு இயல்பாகவே இரண்டு சிறப்புகள் உள்ளன ஒன்று மனதை எதன்மீது செலுத்துகிறோமோ மனம் அதுவாகும், எங்கே செலுத்துகிறோமோ அங்கு காந்த சக்தி குவியும். இந்த இயல்பான சிறப்பினை கொண்டே உடல் தளர்த்தல் பயிற்சியை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அன்போடும் அருளோடும் வழங்கியுள்ளார்கள்.
❄️ *இன்றைய தற்சோதனை*
❄️ அந்தந்த பகுதியில் உள்ள செல்களுக்குள் மனதை நிலை நிறுத்தி சீரான இயக்கத்தை கவனிக்க, கவனிக்க எல்லா வகையான இயக்கங்களும் அணுக்களும் வலிமை பெறுகிறது. இதில் சீரான இயக்கம் என்பது எப்படி அமைகிறது என்பதை சற்றே விஞ்ஞானபூர்வமாக பார்க்கலாம். குடிநீர் குழாயை திறந்து விட்டால் அதில் நுரைகள் இல்லாமல் சீராக தண்ணீர் விழும்போது அந்த நீரைனுடைய அடர்த்தி தன்மை எப்படி இருக்குமோ அது தான் சீரான இயக்கம் ஆகும். நுரையோடு அந்த நீர் வெளிப்பட்டால் அதில் இடைவெளி இருக்கும். இடைவெளி இல்லாத இயக்கத்தையே சீரான இயக்கம் என்று வேதாத்திரி மகரிஷி அன்போடு விளக்குகிறார்கள். இதனை உடல் முழுவதும் இயங்கும் மனோகாந்த இயக்கத்தை தற்சோதனை செய்து பாருங்கள்.
❄️ *இன்றைய பண்புப் பயிற்சி*
❄️ பிரபஞ்சத்தோடு மற்ற எல்லா இயக்க நிகழ்ச்சிகளோடும், மனதை துண்டு படுத்தாமல் இணைத்துக் கொண்டு இயங்கக்கூடிய பயிற்சி முறையை அப்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும், இதை வளர்த்துக் கொள்ளும்போது, இந்த பிரபஞ்ச தன்மாற்றம் அனைத்தும் ஐயமே இல்லாமல் நமக்கு தெளிவாக விளங்கும் மனதை மனதால் உணரும் பண்பில் உயர்வோம். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொண்டு அல்லதை தவிர்த்து நல்லதையே செய்து நாமும் நலமுற இவ்வையகமும் நலம்பெற எல்லாம் வல்ல இறைவன் கொடுத்துள்ள வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி பயன் காண்போம். வாழ்க வளமுடன்...
❄️ *இன்றைய மூலிகை*
❄️ எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும். இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.
❄️ பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.
❄️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
❄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
❄️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment