🌍🍁🌍🍁🌍🍁🌍🍁🌍🍁🌍
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 23*
🌍🍁🌍🍁🌍🍁🌍🍁🌍🍁🌍
🎱 *இன்றைய நித்தியகடன்*
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 *இன்றைய சாதகம்*
🎱 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🎱 *இன்றைய நற்சிந்தனை*
🎱 நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் இது அனைத்திலும் இருந்து வெளியேறக்கூடிய காந்தத்தின் தன்மைகள் வெவ்வேறு வகையாகும். இன்னும் ஆழமாக இதனை ஆராய்ந்தால் நிலத்திற்கு அடியில் இருக்கக்கூடிய உலோகங்கள், ரசாயனங்கள் இவற்றுக்குத் தக்கவாறு நிலப்பரப்பின் மீது உள்ள காந்தத்திற்கும் தன்மை வேறுபடும். கடல்நீர், ஆற்று நீர், குளத்து நீர், மழை நீர் இவைகளில் இருந்து வரும் காந்தத்தின் தன்மையும் வேறுபடும். நெருப்பும் அது எந்தப் பொருளோடு இணைந்து எரிகிறதோ அந்தப் பொருளினுடைய தன்மைக்குத் தக்கவாறு காந்தத்தின் தன்மையும் வேறுபடும். வெப்ப காற்று, குளிர்ந்த காற்று அதிலிருந்து வெளியேறும் காந்தத்தின் தன்மை வேறுபடும்.
🎱 *இன்றைய தற்சோதனை*
🎱 காந்தமும் அது போலத்தான் அது எப்பொருளோடு சேர்ந்து வருகின்றதோ, அதன் தன்மைக்கு தக்கவாறு அதனுடைய காந்தமும் வேறுபடும். விண்ணும் அதனுடைய தற்சுழற்சி வேகம் விரைவுக்கு ஏற்ப அதிலிருந்து வெளிப்படும் காந்தத்தின் தன்மையும் வேறுபடும். இவ்வாறு காந்தம் பல்வேறு தன்மைகளை உடையது. அதனோடு சேர்ந்த இயங்கக்கூடிய எதற்கும் இந்த தன்மைகளை வழங்கக்கூடிய சிறப்பு காந்தத்திற்கு உண்டு. மனமாக இயங்குவதும் முழுக்க முழுக்க காந்தமே, மனதை கொண்டு தவம் செய்யும் போதும் எண்ணம், சொல், செயல் இவை வழியாக இணையும் போதும் மனதிற்கு அவற்றின் தன்மை மாறுகிறது. நுட்பமான இந்த காந்த இயக்கத்தை ஆழமாக தற்சோதனை செய்து உணர்வோம்.
🎱 *இன்றைய பண்புப் பயிற்சி*
🎱 விளங்கின பண்பில் மட்டுமே வாழ்ந்து இயங்கிக் கொண்டிருந்த காந்தம், மனிதத் தோற்றத்திற்கு தன்மாற்றம் அடைந்து தன் இயக்கத்தை முழுமை படுத்திக்கொள்ள, உயிரோடு இணைந்து முயற்சிக்கிறது. எந்த ஒரு இயக்க சீர்மையையும் நாம் புரிந்து கொள்வதற்கு அதனுடைய இயக்கநுட்பத்தைக் காட்டிலும், நம்முடைய இயக்கத்தை நுணுகி வைத்துக்கொண்டால் தான் அவற்றில் உள்ள உண்மைகளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். நுட்பமான இயக்கங்களை அனுபவமாக்கிக் கொள்வதற்கு மௌன நோன்பை மேற்கொள்வோம். வாரத்திற்கு ஒருமுறையாவது அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது "மௌனம்" மேற்கொள்ளும் பண்பினை வளர்த்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்...
🎱 *இன்றைய மூலிகை*
🎱 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🎱 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎱 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment