நித்தியகடன் டிசம்பர் 20 2021

☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 20*

☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️🌀☀️

🌏 *இன்றைய நித்தியகடன்*

🌏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌏 *இன்றைய சாதகம்*

🌏 திங்கட்கிழமை இன்று காலை, கண்ணாடிப் பயிற்சி .பஞ்சேந்திரிய தவம். மாலை நித்தியானந்த தவம்.
 
🌏 *இன்றைய நற்சிந்தனை*

🌏 இந்த பூமிக்கு சுயமாக வெளிச்சம் என்பது கிடையாது. சூரியனிலிருந்து வரும் ஒளி அலைகள் எந்த நிலப்பரப்பின் மீது விழுகிறதோ, அந்நிலப்பரப்பின் மேலுள்ள அணு அடுக்கு காந்தக் களம் இதனை பிரதிபலிக்கிறது. நாம் இதைத்தான் பகல் என்று உணருகின்றோம். சூரியனின் ஒளிக்கதிர்கள் படாத பகுதியை இரவாக உணருகின்றோம். இது பூமியினுடைய தற்சுழற்சியின் காரணமாக நடைபெறும் நிகழ்ச்சி.

🌏 *இன்றைய தற்சோதனை*

🌏 இரவும், பகலும் வருவதுமில்லை, போவதுமில்லை, சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. இவை அனைத்தும் பூமியினுடைய தற்சுழற்சி இயக்கத்தால் விளைகின்ற நிகழ்ச்சிகள். இது போன்று பல விதமான உண்மைகள் மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் நமக்கு உள்ளும், புறமும் கோடான கோடி உண்மைகள் இருக்கின்றன. இந்த உண்மைகளையெல்லாம் தெளிவாக புரிந்து கொண்டு, இயற்கையை ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்த நிலையில் வாழ்வதற்காகவே நாம் இந்த மனிதப் பிறவிக்கு வந்திருக்கிறோம். தன்னைத்தானே ஆய்வுக்கு உட்படுத்தி கொண்டு தற்சோதனை செய்யும்போதுதான் இந்த உண்மையெல்லாம் மனதிற்கு தட்டுப்படும்.

🌏 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌏 நமக்குள் பழக்கத்துக்கும் விளக்கத்துக்குமான போட்டி நடைபெறுகிறது. இதில் நாம் இடையில் நம்மை இழந்துவிடக் கூடாது. விழிப்பு நிலையோடு இருந்து தெளிவாய் வாழும் பண்பை ஏற்றுக்கொண்டு இதில் சிறந்து விளங்க வேண்டும். இயற்கையை மதித்து, இயற்கையோடு ஒத்து போகும் விளக்க வழியில் வாழும் பண்பினால் மட்டுமே இது அமைகிறது. வாழ்க வளமுடன்...

🌏 *இன்றைய மூலிகை*

🌏 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

🌏 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். 

🌏 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

🌏 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌏 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌏 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌏 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments