நித்தியகடன் டிசம்பர் 19 2021

🕸️🔳🕸️🔳🕸️🔳🕸️🔳🕸️🔳🕸️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 19*

🕸️🔳🕸️🔳🕸️🔳🕸️🔳🕸️🔳🕸️

🏮 *இன்றைய நித்தியகடன்*

🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🏮 *இன்றைய சாதகம்*

🏮 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🏮 *இன்றைய நற்சிந்தனை*

🏮 ஒரு மரத்திலிருந்து வெளி வரும் காந்த ஆற்றலில் அந்த மரத்தினுடைய தன்மை உள்ளடங்கி இருக்கும் அதுபோல மண்ணிலிருந்தும், காற்றிலிருந்தும், நெருப்பிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் வெளியாகும் காந்த ஆற்றலிலும் அதனுடைய தன்மையும், தரமும் உள்ளடங்கி இருக்கும். இது இயற்கையின் உடைய நீதி. இந்த நீதியின் அடிப்படையில் நாம் பலவிதமான உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும். வானுலவும் கோள்களோடு நாம் மனதை இணைத்துக் கொண்டு தவம் செய்யும்போது அவைகளுடைய தன்மையும் தரமும் நமக்குள் மேலோங்குகிறது. நம் அறிவிலும் மனதிலும் அவை பிரதிபலிக்கிறது. நல்ல சிந்தனையும் சகல மக்களோடும் இணக்க தன்மையோடு வாழும் பண்புகளும் வெளிப்படும்.

🏮 *இன்றைய தற்சோதனை*

🏮 பஞ்சபூத நவக்கிரக தவம், துரியாதீத தவம், ஒன்பது மைய தவம், இந்த தவங்களையெல்லாம் செய்யும் போது மனதை இயற்கையோடு இணைகிறது. மனதிற்கு விரித்து, சுருங்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சியும், பழக்கமும் இயற்கையின் உண்மைகளை நம் அனுபவமாக்கக்கூடிய செயலாகும். இதனை நன்றாக சிந்தித்து தற்சோதனை செய்யுங்கள் எவ்வாறெல்லாம் இந்த உண்மை நமக்குள் செயல்படுகிறது, இயங்குகிறது என்பதை உணருங்கள்.

🏮 *இன்றைய பண்புப் பயிற்சி*

🏮 நமக்கே நாம் துன்பம் செய்து கொள்ளாமல் வாழக் கூடிய பண்பு இவ்வாறான பயிற்சியின் மூலமாகத்தான் அமைத்துக் கொள்ள முடியும். இந்த பயிற்சி முறைகளை சரியாக கடைப்பிடிக்கும்போது நாமும் துன்பப்படாமல், பிறரையும் துன்பப்படுத்தாமல் வாழக்கூடிய தைரியமும், மன வலிமையும், வைராக்கியமும் உருவாகும் நம்மைச் சுற்றி நம் வாழ்க்கையில் நிறைய போலிகள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் சரியாக அடையாளம் கண்டு கொண்டு. தைரியமாக வாழும் பண்பில் உயர்வோம், உயர வேண்டும். வாழ்க வளமுடன்...

🏮 *இன்றைய மூலிகை*

🏮 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🏮 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🏮 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🏮 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🏮 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🏮 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments