நித்தியகடன் டிசம்பர் 18 2021

🕳️⚡🕳️⚡🕳️⚡🕳️⚡🕳️⚡🕳️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 18*

🕳️⚡🕳️⚡🕳️⚡🕳️⚡🕳️⚡🕳️

❄️ *இன்றைய நித்தியகடன்*

❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

❄️ *இன்றைய சாதகம்*

❄️ சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
❄️ *இன்றைய நற்சிந்தனை*

❄️ உலகம் முழுவதும் வாழும் இந்த மனிதர்கள் மறை பொருள்களாகிய இறைநிலை, இறைத்துகள், விண்துகள், காந்தம், பஞ்ச தன்மாத்திரைகள், கருமையம், ஜீவகாந்தம், வினைபதிவு, மனம், அறிவின் முழுமைபேறு அவைகளை எல்லாம் ஐயமில்லாமல் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும், என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஏன் அடிக்கோடிட்டு கூறுகிறார்கள் என்றால்... நம் வாழ்க்கையின் பெரும்பாலான முடிவுகள் இந்த மறை பொருள்களின் இயக்க விளைவால் தீர்மானிக்கப் படுகிறது. *நம்மை வழிநடத்தி அழைத்துச் செல்வதும் முன்நின்று வழிகாட்டுவதும் இந்த மறை பொருள்களே ஆகும்*. 

❄️ *இன்றைய தற்சோதனை*

❄️ மனித பிறவியின் நோக்கமாகிய விலங்கின பதிவுகளை போக்கி கொண்டு ஆறாவது அறிவியல் முழுமை பெறுவதே பிறவிப் பயனாகும். வாழ்வின் நோக்கம் என்னவென்றால், அதற்கு ஒத்த எண்ணம், சொல், செயல்களை அமைத்துக் கொள்வதே வாழ்வின் நோக்கமாகும். இந்த நோக்கங்களை எல்லாம் வாழ்க்கையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கு தகுந்த திட்டங்களை வகுத்துக் கொண்டு திறம்பட செயலாற்ற வேண்டும். அதற்கு இந்த மறைபொருள் விளக்கமும் தெளிவும் பெற்றால் தான் முடியும்.

❄️ *இன்றைய பண்புப்பயிற்சி*

❄️ நம்முடைய உயிர் இயக்கமும் காந்த இயக்கமும், ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்வதற்கு, நம் கருமையத்திற்குள் மேல் பதிவு தேவைப்படுகிறது. இந்த மேல் பதிவால் ஏற்படும் தெளிவான சிந்தனை ஓட்டமும், மறைபொருள் விளக்கமும், நன்னடத்தையும், உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளால் ஏற்படும் விளைவுகளும் ஞானத்தை நோக்கி நம்மை மெதுவாக நம்மை உயர்த்தும். நன் நோக்கத்தோடும், செயல் திட்டத்தோடும், உயர்வு பெறுவோம், நாமும் நம் குடும்பமும். வாழ்க வளமுடன்...

❄️ *இன்றைய மூலிகை*

❄️ எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும்‌. இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.

❄️ பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.

❄️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

❄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

❄️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments