🎱💯🎱💯🎱💯🎱💯🎱💯🎱
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 16*
🎱💯🎱💯🎱💯🎱💯🎱💯🎱
♻️ *இன்றைய நித்தியகடன்*
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ *இன்றைய சாதகம்*
♻️ வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
♻️ *இன்றைய நற்சிந்தனை*
♻️ உடல் ஆரோக்கியம், உயிர் வளம், சீரான அணு அடுக்கு இயக்கம், சீவகாந்த திணிவு இவை அனைத்தும் ஏதோ ஒன்றால் அமைவது அல்ல. நம்முடைய செயலின் விளைவாக நாம் உண்ணும் உணவின் வழியாக அமைகிறது. ஏனென்றால் நாம் உட்கொண்ட உணவுதான் இந்த உடலாக தன்மாற்றம் அடைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்ல ரத்தம், சதை, கொழுப்பு, எழும்பு, மஜ்ஜை, ஜீவவித்து குழம்பு இவை எல்லாம் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும் என்றால், உண்ணும் உணவு தரமானதாக இருக்க வேண்டும். உணவு உண்ணும் போது என்னும் எண்ணம் தரமானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாம் நோய் எதிர்ப்பு சக்தியோடும் நல்ல சிந்தனையோடும் அன்றாட கடமைகளை சுலபமாக செய்து முடிக்க முடியும்.
♻️ *இன்றைய தற்சோதனை*
♻️ உணவின் தரத்தையும் தன்மையையும் நாம் ஆய்வு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் என்னும் எண்ணத்தின் மூலமாக கூட உணவினுடைய தரத்தையும் தன்மையையும் நிலைகுலையச் செய்து விடமுடியும். உணவு உண்ணும்போது நல்ல சிந்தனையோடும் இடத்தூய்மையோடும் இருந்து உணவை உண்ண வேண்டும். நினைவுகளால் பல உண்மைகளை நாம் நமக்குள் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். இவைகள் முறையானதாக அமைவதற்கு தவம், தற்சோதனை, காயகல்பம், உடற்பயிற்சி இந்நான்கும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையும்.
♻️ *இன்றைய பண்புப்பயிற்சி*
♻️ நமக்குள் ஏற்கனவே இருக்கும் களங்கத்தை போக்கி கொண்டு, புதிதாக நம்மோடு இணையும் அனைத்தையும் நல்வினை பதிவாக அமைத்துக் கொள்ளவும். மனதை நிதானமாக எப்போதும் இயக்கி பழக்க முயற்சி செய்வோமாக. ஏனென்றால் மன அலைச்சுழல் குறைந்த நிலையில் இயங்கும் போது தான், உயிர் விரையம் காந்த விரையம் இல்லாத சூழ்நிலைகள் உருவாகும். இதன் வளர்ச்சி ஒரு காலக்கட்டத்திற்கு பின்னால் உருவாவதே உள்ளுணர்வு பயணமாகும். இது அனைவருக்கும் சாத்தியமே, முறையாக முயற்சிப்போம், முடிவில் ஒன்றிணைவோம்... வாழ்க வளமுடன்...
♻️ *இன்றைய மூலிகை*
♻️ *இஞ்சி+தேன்* தேவையான பொருட்கள், இஞ்சி 4 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
♻️ செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
♻️ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
♻️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
♻️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
♻️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment