நித்தியகடன் டிசம்பர் 14 2021

🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 14*

🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️🍒🕸️

🍁 *இன்றைய நித்தியகடன்*

🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍁 *இன்றைய சாதகம்*

🍁 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🍁 *இன்றைய நற்சிந்தனை*

🍁 இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் நல்வினை பதிவுகள், தீவினை பதிவுகள் என்றெல்லாம் இருக்கிறது. இவற்றை தீர்மானிப்பது எது? எதனுடைய அடிப்படையில் இந்த பொருத்தமானது பொருத்தமில்லாதது என்றெல்லாம் அமைகிறது, என்பதை கொஞ்சம் சிந்தித்து ஆய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்களை செய்து வாழ்வதற்கும் செய்யக்கூடாத செயல்களை தவிர்த்து வாழ்வதற்கும் அவைகளை எல்லாம் நாம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது.

🍁 *இன்றைய தற்சோதனை*

🍁 அறிவு சார்ந்த வாழ்க்கையில் உயர்வு பெறவேண்டுமானால் நாம் இவ்வாறெல்லாம் நம்மை தற்சோதனைக்குள் உட்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆய்வுக்கு பின்னால் நமக்குக் கிடைக்கக்கூடிய தெளிவு தான் நம்முடைய எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது. போகிற போக்கில் நம்முடைய செயல்களை எல்லாம் செய்து விட்டு போகக் கூடிய ஒரு பிறவி அல்ல இந்த மனிதப்பிறவி. இதையெல்லாம் தாண்டி ஏன்? எதற்கு? எப்படி? எதனால் இவை எல்லாம் நடக்கிறது? எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்ள உருவானதே இப்பிறவியாகும்.

🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍁 மனிதர்களுக்கு பொருந்துபவை பொருந்தாதவை என இந்த லாப நட்ட கணக்குகள் அனைத்தையும் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருப்பது நம்முடைய கருமையாகும். இந்த தெய்வீக நீதிமன்றத்தில்தான் இந்த நிகழ்ச்சிகளுக்கான அமைப்பும் இருக்கின்றது. கருமையத்தை கலங்கத்தோடு வைத்துக்கொண்டு கடைத்தேற வாய்ப்பில்லை. அதை எல்லாவகையிலும் நன்றாக கவனிப்பீராக. எல்லாவகையிலும், தூய்மை செய்து கொண்டே நாம் துணிவுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். ஜீவகாந்த திணிவும் ஒழுக்கநெறி துணிவும் ஓங்க பயிற்சி செய்வோம் "*பதம் அடைந்தோம் ஒன்றானோம் பரமானந்தம்*" என்ற மகரிஷியின் வார்த்தைகளை அனுபவமாய் பெறுவோம், நாமும் நம் குடும்பமும் நிறைவான வாழ்வை வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🍁 *இன்றைய மூலிகை*

🍁 *வேப்பிலை* தேவையான பொருட்கள், வேப்பிலை 5, சின்ன வெங்காயம் 1, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும். 

🍁 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.

🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍁 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments