🗾🔳🗾🔳🗾🔳🗾🔳🗾🔳🗾
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 13*
🗾🔳🗾🔳🗾🔳🗾🔳🗾🔳🗾
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 ஒரு மரம் இலைகள் வழியாக வான்காந்தையும், வேர்கள் வழியாக பூமியிலுள்ள சத்துக்களையும் பெற்று பூக்களையும், கனிகளையும் உருவாக்கிக் கொள்கிறது. இலையுதிர் காலம், துளிர்காலம் என பல்வேறு பருவங்களை சந்திக்கிறது. இவ்வாறு நமக்குள்ளும் பலவிதமான இயற்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன அவைகளையெல்லாம் நாம் உணர்வதற்கு மனதை ஒரு முகப்படுத்திக் கொண்டு பக்குவப்பட்ட நிலையில் உயிரோடு இணைத்துக் கொண்டு மூளை செல்கள் வழியாக சிந்தனை செலுத்தும்போது தெளிவாக நமக்கே புரியவரும்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 இந்த பிரபஞ்சம் முழுவதிலும் வான்காந்தம் நிரம்பி இருக்கிறது அதே வான்காந்தம் ஆனது நம் உடலுக்குள் சிவ காந்தமாக சில மாற்றங்களோடு இயங்குகிறது வான்காந்த செய்யும் ஜீவகாந்த செய்யும் இணைக்கும் முயற்சியில் உருவானதே இந்த மனித சரீரம் ஆகும். வான் காந்தத்தை சீவகாந்தமாக நமக்குள் நிலைநிறுத்திக் கொள்ள முறையான பயிற்சி தேவைப்படுகிறது. பருவுடல் வலுவாகவும், நுண்ணுடல் சிறப்பாகவும், காந்த உடல் வளமாகவும் இருப்பதற்கு முயற்சியும் பயிற்சியும் தேவை. இந்த இணைப்பானது மிகவும் எளிமையானதும் சுலபமானதும் ஆகும் ஆனால் அதற்கு நாம் நம்முடைய தேவையில்லாத பழக்கங்களையும் கற்பனைகளையும் தியாகம் செய்ய வேண்டும்.
🌀 *இன்றைய பண்புப் பயிற்சி*
🌀 விளைவை அறிந்து விழிப்பு நிலை நமக்கு தேவை இயற்கை என்ற பேராற்றல் எவ்வாறு தன்னை ஒரு கட்டமைப்புக்குள் ஒழுங்கமைத்துக் கொண்டு இயங்குகிறது என்பதை நாம் உணரும்போது தான் அந்த இயற்கையோடு எல்லா வகையிலும் நாம்மால் இணைந்து கொள்ளவும் முடியும் ஆகவே இந்த விழிப்பு நிலையோடு வாழும் பண்பில் நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும் மேலும் இதன் விளைவாக நம் கருமைய தன்மை தூய்மை பெறும் இந்த பிரபஞ்சத்தோடும் உலக உயிர்களோடும் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நெறிமுறை உருவாகும் இதன் விளைவாய் நாமும் நம் குடும்பமும் நலமும் வளமும் பெறுவோம் வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌀 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌀 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment