🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 11*
🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥🌿🔥
🎯 *இன்றைய நித்தியகடன்*
🎯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎯 *இன்றைய சாதகம்*
🎯 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🎯 *இன்றைய நற்சிந்தனை*
🎯 ஒரு பாத்திரத்தை தலைகீழாக தண்ணீருக்குள் அழுத்தும்போது, அது மேலே வருவதற்குத்தான் முயற்சி செய்யும். அதே பாத்திரத்தை நேராக தண்ணீருக்குள் அழுத்தும்போது நீர் நிரம்பி பாத்திரம் மூழ்கிவிடும். இது போலத்தான் இறை நீதியையும் அதன் தன்மையையும் புரிந்து கொள்ளாமல் எதிர்நிலையில் நின்று செயல்படும்போது, நாம் இயல்பு தன்மையிலிருந்து மாற்றம் பெறுகின்றோம்.
🎯 *இன்றைய தற்சோதனை*
🎯 இறை நீதியை ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்த முறையில் நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளும் போது, அது எதிர்நிலை தன்மையில்லாமல் இறைநிலையோடு ஒன்றென கலந்துவிடுகிறது. காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்கலிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். ஆழமாக தற்சோதனை செய்து இதில் வெற்றி பெறுங்கள்.
🎯 *இன்றைய பண்புப் பயிற்சி*
🎯 எங்கேயோ இருந்து கொண்டு இறைவன் நம்மை காப்பாற்றுகிறான், என்ற கற்பனையான எண்ணங்களை விட்டுவிடுங்கள். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ளக்கூடிய பண்பில் உயர்வு பெறுங்கள். கற்பனை உயிரை சிதைத்து விடும், கற்பனையை அறவே விட்டு நமக்குள்ளாகத்தான் இறைவன் இருக்கிறான், என்ற உண்மையை உள்ளவாறு உணர்வோம் நிறைவாய் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🎯 *இன்றைய மூலிகை*
🎯 எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும். இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.
🎯 பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.
🎯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎯 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment