நித்தியகடன் டிசம்பர் 08 2021

🍁🔶🍁🔶🍁🔶🍁🔶🍁🔶🍁

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 08*

🍁🔶🍁🔶🍁🔶🍁🔶🍁🔶🍁

☣️ *இன்றைய நித்தியகடன்*

☣️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

☣️ *இன்றைய சாதகம்*

☣️ புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
☣️ *இன்றைய நற்சிந்தனை*

☣️ மனிதர்களாகிய நம்முடைய எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் ஒரே கோட்டில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் ஒரு குறளில் இவ்வாறு விளக்கியுள்ளார்கள் "பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க 
நாகரிகம் வேண்டு பவர்" மேலும் இக்குறளில் நாகரிகம் என்றால் இதுதான் என்பதையும் கூறுகிறார்கள். முன்னுக்குப்பின் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கிறதா! என்பதை நீங்களே உங்களை கண்காணித்து சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

☣️ *இன்றைய தற்சோதனை*

☣️ மற்றவர்கள் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் போது, அது பெரும்பாலும் யாருக்கும் பிடிப்பது இல்லை. தேவை இல்லாமல் அவர்கள் மீது சினம் தான் எழும். ஆதலினால் உங்களை நீங்களே தற்சோதனை செய்து தகவமைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய மனித மெய்ஞான அறிவு உயர்வதற்கும் இந்த வழிமுறைதான் சிறந்ததாக இருக்கும். தன்னைத்தானே ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளுதல், தெளிந்த நீரோடையாய் மனதை பராமரித்தல்...

☣️ *இன்றைய பண்புப்பயிற்சி*

☣️ உடல் இயக்கம், மன இயக்கம், அறிவு இயக்கம் இந்த இயக்கங்கள் அனைத்தையும் நலமுற காத்தும், மென்மேலும் வளர்ச்சி பெறும் வகையில் பராமரித்தலும் மனித அறிவு உயர்வுக்கு மிகவும் அவசியமாகும். இந்த பண்பில் நாம் உயர்வு பெற பெற நமக்கு உள்ளுணர்வு அதிகரிக்கும். மறைபொருள் விளக்கங்கள் தெளிவாக புரியும். தனக்கும், பிறருக்கும், துன்பம் இல்லாமல் வாழும் முறையை கடைபிடித்து அதன்பின் வாழத் துவங்குவோம். இந்த சிறப்புமிக்க பண்பில் உயர்ந்து சிறந்து நாமும் நம் குடும்பமும் விளங்குவோமாக. வாழ்க வளமுடன்....

☣️ *இன்றைய மூலிகை*

☣️ *கருஞ்சீரகம்* தேவேயான பொருட்கள், கருஞ்சீரகம் – 50gm, 
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm

☣️ மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

☣️ தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

☣️ நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது. 

☣️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

☣️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

☣️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

☣️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments