🌧️🌏🌧️🌏🌧️🌏🌧️🌏🌧️🌏🌧️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 06*
🌧️🌏🌧️🌏🌧️🌏🌧️🌏🌧️🌏🌧️
🏞️ *இன்றைய நித்தியகடன்*
🏞️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏞️ *இன்றைய சாதகம்*
🏞️ திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🏞️ *இன்றைய நற்சிந்தனை*
🏞️ மழையாக பொழியும் நீரை அணைகளில் தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப பாசனத்திற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவது போல, வான் காந்தத்தை உடலுக்குள் சேகரித்து பழகவேண்டும். உடலுக்குள் ஜீவகாந்த சக்தியை சேகரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மேலும் அதற்கான முறையான பயிற்சியை மேற்கொள்ளும் போது, அணுக்களுக்கு இடையேயும் அணுக்களுக்கு உள்ளேயும் ஜீவகாந்தம் போதியளவு தங்கி தழைத்து இயங்க துவங்கும். கோள்களின் சஞ்சார நிலைக்கு ஏற்பவும், வெட்ப தட்ப ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்பவும், உணவு, எண்ணம், மற்றும் நம் அன்றாட பல வகையான செயலுக்கு ஏற்பவும், இவைகளை பயன்படுத்தும் முறைகளுக்கு தக்கவாறும், ஜீவ காந்தத்தில் அவ்வப்போது நம் உடலுக்குளாக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.
🏞️ *இன்றைய தற்சோதனை*
🏞️ இந்த செலவுகளை சரி செய்து கொள்ளவும், எப்போதும் சமநிலையில் வைத்து பயன்படுத்தவும், உடலையும், உயிரையும், மனதையும் பாதிக்காத வண்ணம் பாதுகாத்து கொள்ளவும், ஜீவகாந்தத்தை சேமித்து பழகவேண்டும். பஞ்சபூதங்களால் வடிவமைக்கப்பட்ட இந்த உடல் பஞ்சபூதங்களை ஒழுங்குபடுத்தி முறையாக இயக்கி பழகும் போது, இயல்பாகவே நம் உடலில் ஜீவகாந்தம் தங்கி தலைக்கும் வாய்ப்புகள் உருவாகிறது. இந்த சேமிப்பு பழக்கம் தான் நம்மை இறைநிலை வரை அழைத்துச் செல்லவும் பயன்படப் போகிறது. உடல் ஆரோக்கியமும், மன வளமும், உயிர் வளமும் இந்த சேமிப்பின் அடிப்படையிலேயே அமைகிறது...
🏞️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🏞️ சீவகாந்தம் போதிய அளவு நமக்குள் இருப்பாக இருக்கும் போது தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவே முடியும். நம்முடைய எல்லா வகையான செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருக்கும் ஆற்றல் சிவகாந்தமே ஆகும். மனதை உற்சாகத்தோடு வைத்துக் கொள்வதற்கும், நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வதற்கும், இயற்கையின் பல உண்மைகளை சிந்தித்து, உணர்ந்து, அனுபவம் ஆக்கிக் கொள்வதற்கும், இந்த சிறப்பு மிக்க சிவகாந்தத்தை சேகரித்து வாழும் பண்பில் உயர்வோம். உடலால், மனதால், உயிரால் வறுமை இல்லாமல் நாமும் நம் குடும்பமும் வாழ்வோம்... வாழ்க வளமுடன்...
🏞️ *இன்றைய மூலிகை*
🏞️ *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🏞️ செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🏞️ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🏞️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏞️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏞️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏞️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment