நித்தியகடன் நவம்பர் 28 2021

🔶🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮🔶

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 28*

🔶🔮🔶🔮🔶🔮🔶🔮🔶🔮🔶

🔰 *இன்றைய நித்தியகடன்*

🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔰 *இன்றைய சாதகம்*

🔰 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🔰 *இன்றைய நற்சிந்தனை*

🔰 கண்ணியமான உடை, கண்ணியமான பேச்சு, கண்ணியமான செயல்கள் எதற்காக தேவைப்படுகிறது, கண்ணியத்திற்கு எதற்காக இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், இதனுடைய பின்புலத்தில் இருக்கும் விஞ்ஞானம் என்ன, ஆராய்வோம். மற்றவர்களுடைய பார்வைக்கு நாம் இப்படி இருக்க வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள், அதுமட்டுமல்ல மற்றவர்களுடைய பார்வைக்கு என்பதை தவிர்த்து இதில் பல விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் கண்ணியமாக உங்களுடைய நடை, உடை, பாவனைகளை வைத்து கொள்ளும் போது, உயிரை உணர்வதற்கும், மனதை அறிவதற்கும் நீங்கள் உங்களை எப்படி வெளிப்படுத்தி கொள்கிறீர்கள் என்பதே முக்கியமானது, மேலும் இது ஒரு வகையான தகவமைவு கோட்பாடு ஆகும்.

🔰 *இன்றைய தற்சோதனை*

🔰 நம்மை நாமே கவனித்துக் கொள்கிறோம், நம்மை நாம் கண்காணிக்கிறோம், என்றபோது தான் மனதிற்கும் உயிருக்குமான இணக்கத்தன்மையை மேலோங்கச் செய்கிறது. உயிருக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான நட்புறவில் இறைவனைப் பற்றியும் அறிவைப் பற்றியும் தெளிவான அனுபவம் கிடைக்கிறது. இதற்குப் பின்னால் ஒரு விஞ்ஞானம் இருக்கிறது, அந்த விஞ்ஞானத்தோடு நம்மை இணைக்கும் பாலம் தற்சோதனை மட்டும்தான். தன்னைத் தானே ஒருவர் உணர நினைத்தாலும், அறிந்து கொள்ள நினைத்தாலும் அவர்கள் முறையாக பின்பற்ற வேண்டியது தற்சோதனையாகும். துளைத்த பொருளை துளைத்த இடத்தில் தேடுதல் என்பதே ஞானம்.

🔰 *இன்றைய பண்புப் பயிற்சி*

🔰 எதில் எதிலெல்லாம் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்கிறீர்களோ, பாதுகாத்துக் கொள்கிறீர்களோ, அது அதிலிருந்தெல்லாம் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும், அளவு முறையோடு அணைத்தோடும் தொடர்பு கொள்ளுங்கள். எதையும் நீங்கள் வெறுக்கவும் வேண்டாம், அளவுக்கு மீறி எதையும் நீங்கள் நேசிக்கவும் வேண்டாம், இந்த கோட்பாடு உயர்திணை அஃறிணை என அனைத்திற்கும் பொருந்தும். எல்லா இடத்திலும் நடுநிலையோடு இருந்து இறை ஞானத்தில் உயரும் பண்பு நடுநிலை பண்பு. இதை உளமாற ஏற்று உளவியலில் உயருங்கள். வாழ்க வளமுடன்...

🔰 *இன்றைய மூலிகை*

🔰 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🔰 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🔰 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔰 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔰 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments