💫♨️💫♨️💫♨️💫♨️💫♨️💫
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 27*
💫♨️💫♨️💫♨️💫♨️💫♨️💫
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 உங்களுடைய மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய மதிப்பை உணர்வதென்றால் உடல், உயிர், மனம், அறிவு இவற்றினுடைய மதிப்பை உணர்வதாகும். உங்களுடைய மதிப்பு உங்களுக்கு தெரியாத வரை, மற்றவர்களுடைய மதிப்பும் உங்களுக்கு புரியாது, அல்லது மற்றவருடைய மதிப்பை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லோருக்கு பொதுவானது அறிவும், திறமையும் இவற்றில் உங்களுடைய மதிப்பு உணரும்போது. உங்களுடைய திறமையும், அறிவும் மேலோங்கும். மற்றவர்களுடைய திறமையையும், அறிவையும் அப்போதுதான் உங்களால் வாழ்த்தவும் முடியும். அவர்கள் மேலும் வளர்ச்சி பெற உங்களாலான உதவியை செய்யவும் முடியும்.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 உங்களுக்கு கிடைக்காத ஒன்றில், உங்களால் உணர முடியாத ஒன்றில் மற்றவர்கள் வளர்ச்சி பெறும்போதும், அவர்களுக்கு அது கிடைக்கும் போதும், அதனை பார்த்து உங்களால் அமைதியாக இருக்க முடியாது. போட்டியும், பொறாமையும் மேலோங்கும். உங்களுடைய மதிப்பை உணர தற்சோதனை செய்வீர். உங்களுக்குள் இருக்கும் உண்மைகளை உணர முயலுங்கள் அது உங்களை வழிநடத்தும். அதுவே குரு அருளாகவும் இறையருளாகவும் உருவாகும்.
🍁 *இன்றைய பண்புப் பயிற்சி*
🍁 நம்மை நாம் மதிக்கும் பண்பில் உயரவேண்டும் போது அப்போது ஏற்படும் அமைதியிலும் தெளிவிலும் மட்டும் தான் மற்றவர்களை நம்மால் மதிக்கவும், உணர்வும் முடியும் என்ற உண்மையை உணர்வோம். நம்மை நாம் மதிக்கத் துவங்கினால் மற்ற அனைத்து மதிப்பும் நமக்குள் மேலோங்கி விடும் சீரான ஞான சிந்தனைகள் அங்கேதான் ஊற்றெடுக்கும் நம்மை நாம் மதிப்போம்.
🍁 *இன்றைய மூலிகை*
🍁 எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும். இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.
🍁 பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment