நித்தியகடன் நவம்பர் 24 2021

⭕🚥⭕🚥⭕🚥⭕🚥⭕🚥⭕

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 24*

⭕🚥⭕🚥⭕🚥⭕🚥⭕🚥⭕

🔳 *இன்றைய நித்தியகடன்*

🔳 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔳 *இன்றைய சாதகம்*

🔳 புதன்கிழமை 
காலை:- தீபப்பயிற்சி, 
ஒன்பது மையம், 
மாலை:- நித்யானந்தம்.
 
🔳 *இன்றைய நற்சிந்தனை*

🔳 பிரபஞ்சமாகவும் இந்த பிரபஞ்சம் இயங்குவதற்கான முழு ஆற்றலாகவும் இருந்துகொண்டு இருப்பது எல்லாம்வல்ல சுத்தவெளி. இந்த சுத்த வெளியே பஞ்ச பூதங்களாக தன்மாற்றம் பெற்று அவைகள் கூடிய, கோடான கோடி அண்டங்களாகி அதிலும் உயிரினங்கள் உற்பத்தியாகக்கூடிய வாய்ப்பை பெற்றது தான், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமி. இந்த பூமியானது துவக்க காலத்தில் இவ்வாறு இல்லை. எரிகற்கள் மோதி, சிதறி, மைய சுழல் விரைவு ஏற்பட்டு, பூமியின் மேற்பரப்பில் மேகங்கள் உருவாகி, மழை பொழிந்து, ஓரறிவு தாவர இனம், இரண்டு அறிவு புழுக்கள், மூன்றறிவு பூச்சிகள், நான்கறிவு பறப்பன நடப்பன, ஐந்தறிவு விலங்குகள், ஆறறிவு மனிதன் வரை படிப்படியாக உருமாறியது தான் இந்த பூமி...

🔳 *இன்றைய தற்சோதனை*

🔳 நமக்கு மட்டும் இல்லை, இந்த பூமியில் உயிரினங்கள் அனைத்துக்கும் வாழும் நல்வாய்பை வழங்கியது இயற்கை. இந்த இயற்கையையும் அதன் வளங்களையும் நமக்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு, மேலும் அதை முறைதவறி உபயோகப்படுத்தி இயற்கையையும் மாசுபடுத்தி கொண்டிருக்கிறோம். உணவு சங்கிலி போல உயிரின சங்கிலியும், மனிதர்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஒரு ஜீவன் அழிந்துவிட்டால் அதைத் தொடர்ந்து மற்ற ஜீவன்களும் அழிந்துவிடும். மற்ற ஜீவன்கள் அழியும்போது அதோடு சேர்ந்து நாமும் அழிந்து விடுவோம். இயற்கையை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் மனிதர்களை சார்ந்து இருக்கிறது, என்பதை தற்சோதனை செய்து உணர்ந்து கொள்வோம்.

🔳 *இன்றைய பண்புப்பயிற்சி*

🔳 தானும் நலமாக வாழ்ந்து மற்றவர்களையும் நலமுற வாழ செய்வதுதான் இந்த மனிதப் பிறவியாகும். சுயநலத்தோடு இந்த மனிதர்கள் தங்களை மட்டும் பாதுகாத்துக்கொள்வது என்ற முடிவெடுத்து, அதன் விளைவாக பல தவறுகளை உருவாக்கிக் கொண்டு அவைகளையே சட்டமாக்கி, உயிருள்ள மனித இனம் இப்போது ஜடப்பொருள் போல் இருந்து கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான நிகழ்ச்சி அல்ல, இவைகளையெல்லாம் வருங்காலத்தில் மாற்றி அமைத்துக்கொண்டு, அடுத்த தலைமுறைக்கு புதிய பண்பாட்டையும், பூமியையும் வாழ்க்கை கல்வியையும், வழங்குவோம்... வாழ்வோம்... வாழ்க வளமுடன்...

🔳 *இன்றைய மூலிகை*
 
🔳 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🔳 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🔳 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔳 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔳 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔳 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments