நித்தியகடன் நவம்பர் 23 2021

💢🌐💢🌐💢🌐💢🌐💢🌐💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 23*

💢🌐💢🌐💢🌐💢🌐💢🌐💢

🕳️ *இன்றைய நித்தியகடன்*

🕳️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🕳️ *இன்றைய சாதகம்*

🕳️ செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
🕳️ *இன்றைய நற்சிந்தனை*

🕳️ எண்ணமற்ற நிலைக்கு மனதை கொண்டு செல்ல முடியுமா? என்றால் முடியவே முடியாது. தவத்தில் இருந்தாலும் எண்ணங்கள் எழவே செய்யும். ஆனால் உங்களுடைய எண்ணங்களை நல்ல செயல்பாடுகளை நோக்கி திருப்பிக் கொள்ளலாம். உயிரின் அசைவை உயிருடைய தன்மையை, உயிரினுடைய இயக்க நீதியை, இவைகளை ஆராய்ச்சி செய்யும் விதமாக உங்களுடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். எண்ணமற்ற நிலை இல்லவே இல்லை.

🕳️ *இன்றைய தற்சோதனை*

🕳️ உடலுக்கும், உயிருக்கும் உண்டான நட்பில் இவை இரண்டும் பிரியும் போதுதான் எண்ணமற்ற நிலை என்பது உருவாகிறது. உயிரோடு உடல் இணைந்து இயங்கும் வரை எண்ணம் இருக்கவே செய்யும். குறிப்பு:- மன அலைசுழல் என்பது வேறு, எண்ண ஓட்டம் என்பது வேறு. எண்ணங்களை சீரமைத்து சிறப்பான ஆராய்ச்சிகளாக, மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். ஏன்? எதற்கு? எதனால்? எப்படி? என்று தற்சோதனை செய்து விழிப்பு நிலையோடு இதனை சிந்தனை செய்யுங்கள்.

🕳️ *இன்றைய பண்புப் பயிற்சி*

🕳️ உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்ளும் பண்பில் உயர்வதற்காக, நமக்கு கிடைத்த அரியதொரு வாய்ப்பு "குண்டலினி யோகப் பயிற்சி, மனவளக்கலை" இதனைப் பயன்படுத்தி இயல்பான நிலைக்கு உங்களுடைய மனதை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து அதில் வாழும் சிறப்பு நிலைக்கு உயர்வீர்களாக. வாழ்க வளமுடன்...

🕳️ *இன்றைய மூலிகை*

🕳️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🕳️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🕳️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🕳️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🕳️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🕳️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments