🎌🔳🎌🔳🎌🔳🎌🔳🎌🔳🎌
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 22*
🎌🔳🎌🔳🎌🔳🎌🔳🎌🔳🎌
🚥 *இன்றைய நித்தியகடன்*
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 *இன்றைய சாதகம்*
🚥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🚥 *இன்றைய நற்சிந்தனை*
🚥 சிவப்பு மஞ்சள் பச்சை இந்த வண்ணங்களே சாலையில் நாம் வாகனத்தில் செல்லும்போது நம்மை வழி நடத்தக் கூடியதாகும் இந்த மூன்று வண்ணங்களில் செயல்கள் இதுதான் நிற்கவும் கவனிக்கவும் செல்லவும் இந்த சாலைவிதிகளை மதிக்கும் போது நம்முடைய பயணமானது பாதுகாப்பாக அமையும் மாறாக மதிக்காமல் நம்முடைய எண்ணப்படி சாலைகளில் நடந்து கொண்டால் நமக்கும் பிறருக்கும் பேர் ஆபத்தான விபத்தாக முடிவடைகிறது
🚥 *இன்றைய தற்சோதனை*
🚥 அகநோக்கு பயணத்திற்கும் இதே விதிமுறை பொருத்தமானதாகவே இருக்கிறது நின்று கவனித்து அதன்பின் செயல்களை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும் ஏனோதானோ என்று நம்முடைய செயல்கள் எப்போதும் எங்கேயும் அமைத்துக் கொள்ளக்கூடாது இது நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஒரு நாளும் ஒரு பொழுதும் நன்மையை தராது நன்றாக தற்சோதனை செய்து இதன் நன்மைகளை உணர முயற்சி செய்வோம்.
🚥 *இன்றைய பண்புப்பயிற்சி*
🚥 இந்த மனித வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு பல ஜென்ம காலங்களாக நாம் தவறுகளையே செய்து புலன் இன்பங்களுக் குள்ளாகவே நாம் எண்ணியபடி எல்லாம் வாழ்ந்து காலத்தை விரயமாக்கி இருக்கிறோம் இந்த மனிதப் பிறவியானது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தவறுகளை சீர்திருத்தி கொண்டும் புலன் இன்பங்களை கடந்து வாழக்கூடிய வாய்ப்புக்களை பெற்றிருக்கும் பிறவியாகும். இப்பிறவியில் வாழ்க்கையின் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் நின்று கவனித்து திட்டமிட்டுக் கொண்டு செயலாற்ற அறநெறியோடும், உள்ளுணர்வோடும் புறப்படுவோம். வாழ்க வளமுடன்...
🚥 *இன்றைய மூலிகை*
🚥 *அருகம்புல் பானம்* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
🚥 அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
🚥 இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
🚥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🚥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🚥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🚥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment