நித்தியகடன் நவம்பர் 21 2021

🔮🔘🔮🔘🔮🔘🔮🔘🔮🔘🔮

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 21*

🔮🔘🔮🔘🔮🔘🔮🔘🔮🔘🔮

🍥 *இன்றைய நித்தியகடன்*

🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🍥 *இன்றைய சாதகம்*

🍥 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.
 
🍥 *இன்றைய நற்சிந்தனை*

🍥 மனிதர்களுக்கு ஆறறிவு என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். எதை வைத்து நமக்கு ஆறறிவு இருக்கிறது என்பதை ஒற்றுக் கொள்கிறோம். முதலில் நாம் ஓரறிவு ஈரறிவு என்று வரிசைப்படுத்தும் போது எதை வைத்து இந்த வரிசைகள் அமைகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தொட்டால் உணர்ந்து கொள்ள கூடிய அறிவு தாவரம் ஓரறிவு, (உ-ம்: தொட்டாசுருங்கி) சுவைகளை உணரும் நாக்கு இரண்டறிவு, வாசனையை உணரும் மூக்கு மூன்றறிவு, பார்த்து உணரும் கண்கள் நான்கறிவு, ஓசையை உணரும் காதுகள் ஐந்தறிவு.

🍥 *இன்றைய தற்சோதனை*

🍥 ஆறாவது அறிவு மனிதனுக்கு என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் நமக்கு ஆறாவது அறிவு என்பது என்ன..? எதனுடைய, அடிப்படையில் நமக்கு ஆறறிவு இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். உலகத்தில் பொதுவாக சொல்வதுண்டு, பகுத்தறிவே ஆறாவது அறிவு என்பதை ஏற்றுக் கொண்டால் ஓர் அறிவு இனமாகிய செடிகளுக்கே இது உண்டு. நாம் தொட்டால் சுருங்கி கொள்கிறது. பக்கத்தில் உள்ள மற்ற இலை, கொடி, செடி அதன் மீது படும்போது சுருங்குவதில்லை. ஆனால் நாம் தொடும்போது சுருங்குகிறது இது பகுத்தறிவு தானே.

🍥 *இன்றைய பண்புப் பயிற்சி*

🍥 ஆக பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவு கிடையாது. அதற்கும் மேலாக தன்னைத்தானே உணர்வதற்கான அறிவே ஆறாவது அறிவு. தன்னை உணர்ந்து கொண்டு தனக்கு மூலமான ஆற்றலையும் (இறைவன்) உணர்ந்து கொள்வதற்காகவே இந்த மனித உருவத்திற்கு இப்பூமியில் நாம் தன்மாற்றம் பெற்றிருக்கிறோம். தன்னை தானே உணரக்கூடிய ஆறாவது அறிவில், பண்பில் உயர்வோம். எவரொருவர் எவரொருவருக்கும் துன்பம் செய்யாமலும், பிறர் படும் துன்பங்களை போக்கியும், தானும் வாழ்வில் உயர்ந்து பிறர் உயரவும் உதவுவதே ஆறாவது அறிவாகும். வாழ்க வளமுடன்...

🍥 *இன்றைய மூலிகை*

🍥 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🍥 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🍥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍥 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments