நித்தியகடன் நவம்பர் 20 2021

🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 20*

🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀🍀🌀

☄️ *இன்றைய நித்தியகடன்*

☄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

☄️ *இன்றைய சாதகம்*

☄️ சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
☄️ *இன்றைய நற்சிந்தனை*

☄️ சுத்தவெளி, இறைநிலை இயற்கை, தெய்வம், அறிவு இவை அனைத்துமே ஒன்றுதான். பிரபஞ்சமும், பிரபஞ்சத்தில் அனைத்து தோற்றங்களாகவும் இருந்து கொண்டு, தன்னை எங்கேயும் வெளிக்காட்டிக் கொள்ளாத தூய பொருளாக இருக்கும், தெய்வ நிலையை உணர்ந்து கொள்வதற்கு நாம் மனதளவில் தயாராக வேண்டும், மனதை பண்படுத்தி பக்குவப்படுத்த வேண்டும். அவன் நம்மை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டான், பலவிதமான சோதனைகள் வைத்து அதிலெல்லாம் தேர்ச்சி பெறுகிறோமா, என்று பார்த்து அதன் பின் தேர்வு செய்து படிப்படியாக பயிற்சி அளிப்பான், அவனோடு இணைவதற்கு...

☄️ *இன்றைய தற்சோதனை*

☄️ இறைநிலையினுடைய தன்மையும் தரத்தையும் சிறுக சிறுக நம்மனதில் சேர்த்துக்கொண்டே வரும்போது, தெய்வ நிலையை உணர்வதற்கான வாய்ப்பு உருவாகும். இறைநிலையை பற்றிய புரிதலும் தெளிவும் நமக்கு இருந்தால்தான் அதனோடு ஒன்றி கலக்க முடியும். இதற்கு இறைநிலை தவம், உடற்பயிற்சி, காயகற்பம், தற்சோதனை இவையெல்லாம் பேருதவியாக அமைகிறது. மீண்டும் மீண்டும் இறைநிலை தவத்தை செய்துவர இறை நிலைக்கும் நமக்குமான புரிதலும் தெளிவும் நமக்குள் நாளுக்கு நாள் மேலோங்கும்.

☄️ *இன்றைய பண்புப்பயிற்சி*

☄️ விருப்பு, வெறுப்பு, போட்டி, பொறாமை, பொருள் பற்று, அதிகாரப் பற்று இவை எல்லாம் இல்லாதவன் அவன். அவனோடு இணைய முயற்சிப்பவர்களுக்கும் இக்குணங்கள் எல்லாம் இருக்கக் கூடாது. மேலும் இக்குணங்களை வைத்துக் கொண்டு அவனோடு இணைவது என்பது எக்காலத்திலும் எவரொருவருக்கும் சாத்தியமே இல்லை. விட்டுக்கொடுத்தல், தியாகம், அனைத்து உயிர்களின் பால் அன்பும் கருணையும் உள்ளடக்கமாகக் கொண்ட தாகும் சுத்தவெளி. இப்பண்புகளை எல்லாம் சிறுகச் சிறுக நமதாக்கிக் கொண்டு நமக்கான வாழ்வை வாழ்வோம்... நாமும் நம் குடும்பமும்... வாழ்க வளமுடன்...

☄️ *இன்றைய மூலிகை*

☄️ எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும்‌. இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.

☄️ பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.

☄️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

☄️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

☄️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments