நித்தியகடன் நவம்பர் 19 2021

🍁🔳🍁🔳🍁🔳🍁🔳🍁🔳🍁

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 19*

🍁🔳🍁🔳🍁🔳🍁🔳🍁🔳🍁

🌍 *இன்றைய நித்தியகடன்*

🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🌍 *இன்றைய சாதகம்*

🌍 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
🌍 *இன்றைய நற்சிந்தனை*

🌍 பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமியில் பெரிய பெரிய விலங்குகள் இருந்திருக்கிறது. (உ-ம்: dainosurs) ஒரு காலகட்டத்தில் தன்மாற்ற நீதியின் அடிப்படையில் இவைகள் அழிக்கப்பட்டுவிட்டது. மனித இனம் இப் பூமியில் தோன்றுவதற்கு முன்பாக மனிதர்களுக்கு எதிராக உள்ள அனைத்தையும் இயற்கை அழித்துவிட்டது. மனிதனுக்கு ஆபத்து இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிய பின் இறைவன் மனிதர்களை உருவாக்கினான். மனிதர்கள் மீது இறைவனுக்கு எவ்வளவு அன்பும், கருணையும் இருந்திருந்தால் இப்படி செய்திருப்பான். 

🌍 *இன்றைய தற்சோதனை*

🌍 தன்னை ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்காகவும் , மற்ற உயிரினங்களுக்காகவும் தன்னை அழித்துக்கொண்ட இயற்கையை காப்போம், மதிப்போம், போற்றுவோம். இந்த இயற்கை என்ற பேராற்றலே இறைவனாகவும் இருக்கிறது. நாமும் அந்த இயற்கையில் ஒன்றுதான் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வோம். இந்த உண்மையை சிந்தித்து தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.

🌍 *இன்றைய பண்புப் பயிற்சி*

🌍 நம்மை துன்பப்படுத்தி பார்க்க வேண்டும் என்பது இறைவனுடைய எண்ணமோ, ஆசையோ கிடையாது. நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தவறுகளிலிருந்தும், பிழைகளிலிருந்தும் நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளக் கூடிய அறிவும், திறமையும் இயல்பாகவே நமக்குள் இருக்கிறது. அதனை வளர்த்துக்கொள்ள இறைவன் எடுக்கும் முயற்சி தான் சிறு சிறு துன்பங்கள் என்ற உண்மையை உணர்ந்து பிழையான எண்ணம், சொல், செயலிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்வோமாக. வாழ்க வளமுடன்...

🌍 *இன்றைய மூலிகை*

🌍 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🌍 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🌍 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🌍 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments