நித்தியகடன் நவம்பர் 18 2021

🔘🔶🔘🔶🔘🔶🔘🔶🔘🔶🔘

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 18*

🔘🔶🔘🔶🔘🔶🔘🔶🔘🔶🔘

♻️ *இன்றைய நித்தியகடன்*

♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

♻️ *இன்றைய சாதகம்*

♻️ வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.
 
♻️ *இன்றைய நற்சிந்தனை*

♻️ திருக்குறள்:- "பிறப்பு ஒக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" இறப்பு என்பது இந்த பூமியில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு ஜீவனுக்கும் சிறப்பு என்பது தனித்தனியாகவே அமைந்திருக்கிறது. அதனிலும் மனிதனுக்கு அமைந்துள்ள சிறப்பு மிகவும் போற்றத்தக்கது, மதிப்புடையது. இந்த மனித பிறப்பினால் மட்டும்தான் இறைவனின் தன்மையை, இயக்கத்தை, சிறப்பை உணர்ந்து கொள்ள முடியும். இந்த சிறப்பு மனிதப் பிறப்பிற்குமட்டுமே அமைந்ததாகும்.

♻️ *இன்றைய தற்சோதனை*

♻️ ஏதேனும் ஒரு சிறு வகையில் எல்லா வகையான ஜீவன்களுக்கும் சிறப்பு என்பது இருக்கிறது. இந்த மனிதனுடைய சிறப்பு தன்னைத்தானே உணரத்தக்கது. தன்னுடைய நிலை, இயக்கம், மூலம் இவை அனைத்தையும் உணர்ந்து கொள்ளக்கூடிய சிறப்பு மனிதப் பிறப்பிடம், மட்டுமே அமைந்திருக்கிறது. இந்த சிறப்புமிக்க அமைப்பை எல்லா வகையிலும் தற்சோதனை செய்து வாழ்க்கையை சீரமைத்து கொண்டு சிறப்பான உயர்வு காண்போம்.

♻️ *இன்றைய பண்புப்பயிற்சி*

♻️ எந்த ஒன்றையும் சரியாக உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்ளக்கூடிய பண்பில் உயர வேண்டும். இந்த பண்பில் உயர, உயர நமக்கு நம்முடைய நிலைபாடும், அறிவின் தன்மையும் மனதில் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். எந்த ஒன்றையும் மறுமை இல்லாமல் நேர்நிறையோடு, உள்ளதை உள்ளவாறு உணரும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்..!

♻️ *இன்றைய மூலிகை*

♻️ *இஞ்சி+தேன்* தேவையான பொருட்கள், இஞ்சி 4 கிராம் 
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்

♻️ செய்முறை:- இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து அதில் உள்ள சுண்ணாம்பு படிந்த பின் தெளிந்த சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.

♻️ நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- இஞ்சி சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.

♻️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♻️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♻️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♻️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments