🕳️⭕🕳️⭕🕳️⭕🕳️⭕🕳️⭕🕳️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 17*
🕳️⭕🕳️⭕🕳️⭕🕳️⭕🕳️⭕🕳️
🔰 *இன்றைய நித்தியகடன்*
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 *இன்றைய சாதகம்*
🔰 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🔰 *இன்றைய நற்சிந்தனை*
🔰 கடினமான கெட்டிப் பொருளாக இருக்கும் பாறையிலும் மரங்களும், செடிகளும் வளர்கின்றன. தோற்றத்திற்கும் பயன்பாட்டிற்கும் கடினமாக இருக்கும் அனைத்தும் உரிய முறையில் மற்றொன்றுக்கு தனக்குள் இடம் கொடுக்கின்றன. இதுபோன்று மற்றவர்களுக்கும் தன் வாழ்க்கையில் இடம் கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை ஆகும். இயற்கையினுடைய கோட்பாடும் விதியும் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
🔰 *இன்றைய தற்சோதனை*
🔰 மனதை இறுக்கமாக வைத்துக்கொண்டு மற்றவர்களோடு நாம் இயல்பாகவோ, இலகுவாகவோ எண்ணம் சொல் செயல்களை பங்கிட்டுக் கொள்ள முடியாது. மன இறுக்கத்தில் இருந்து உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளுங்கள். விரிந்து விரிந்து மனதை ஒரே நிலையில் வைத்து தவம் செய்யும் போதும், தற்சோதனை செய்யும் போதும் மன இறுக்கங்கள் தளர்ந்து விடுகின்றன.
🔰 *இன்றைய பண்புப் பயிற்சி*
🔰 இந்த பூமியில் மனிதர்களுக்கு சிறப்பான கடமைகளும், பொறுப்பான வாழ்க்கைமுறையும் அன்போடு இயற்கை எனும் இறை பேராற்றலால் வழங்கப் பட்டுள்ளது, என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் போதுதான் நாம் நமக்கு துன்பம் செய்து கொள்ளாமலும், பிறருக்கு துன்பம் செய்யாமலும் வாழ்வதற்கு முயற்சி செய்வோம். இயற்கையினுடைய பேருண்மையை உணரும் பண்பில் நாளுக்கு நாள் உயர்வோமாக. வாழ்க வளமுடன்...
🔰 *இன்றைய மூலிகை*
🔰 *கருஞ்சீரகம்* தேவேயான பொருட்கள், கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🔰 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🔰 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🔰 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது, பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🔰 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔰 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔰 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment