💫☄️💫☄️💫☄️💫☄️💫☄️💫
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 16*
💫☄️💫☄️💫☄️💫☄️💫☄️💫
🤹 *இன்றைய நித்தியகடன்*
🤹 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🤹 *இன்றைய சாதகம்*
🤹 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
🤹 *இன்றைய நற்சிந்தனை*
🤹 மனிதர்களுடைய மனமானது சாதாரணமாக கேளிக்கைகளிலும், புலன் இன்பங்களிலும், பொழுதுபோக்கான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, புலன் இயக்க போதையில் மயங்கி எழும் எண்ணங்களை எல்லாம் செயல்படுத்தி பேராசையோடும், சிற்றின்பத்தோடும், வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்கி அங்குமிங்குமாக மிதந்து திரிந்து கொண்டே இருக்கும். மனம் அறிவோடு இணையாத வரை, அறிவை சந்தித்து தன்னைப் பற்றிய உண்மைகளை இந்த மனமானது, தெரிந்தும் உணர்ந்தும் கொள்ளாத வரை மனம் மனமாக இயங்காது...
🤹 *இன்றைய தற்சோதனை*
🤹 இயற்கையினுடைய அமைப்பில் அறிவுதான் மனதிற்கு... இதுதான் நீ பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்து இயக்கங்களோடும் இணைந்து அவைகளைப் பற்றிய உண்மைகளை ஆய்வுசெய்து புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல், திறமை உன்னிடமே இருக்கிறது மேலும், மனிதர்களுக்கும் இறைவனுக்கும் இடையே இருக்கக்கூடிய பொருள் நீதான் என்று, அறிவுதான் மனதிற்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். இயற்கையின் அமைப்பு அப்படித் தான் உள்ளது.
🤹 *இன்றைய பண்புப்பயிற்சி*
🤹 மனதிற்கும் அறிவுக்குமான இணைப்பை உருவாக்குவது தவம் தற்சோதனை. இந்த இரண்டு செயல்களின் விளைவு மனமும் அறிவும் ஒன்றுக் கொன்று சந்திக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்குகிறது. சுற்றி திரிந்த மனம், இறைநிலையின் தன்மையைப் பெற்று தன்னுடைய இயல்பான நிலைக்கு உயர்கிறது. இறை நீதியையும் அதன் சிறப்புகளையும், தன்னுடைய செயல்திறனாக பெற்று இயங்கத் துவங்குகிறது. இந்த இடத்தில்தான் மனிதப் பண்பு மேலோங்கி ஆறாவது அறிவு முழுமை பெறுகிறது, பிறவியின் நோக்கமும் நிறைவு பெறுகிறது. "அது நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவின் முழுமை அது முக்தி -வேதாத்திரி மகரிஷி" இத்தகைய சிறப்புமிக்க பயிற்சியை செய்து நாமும் நம் குடும்பமும் நலமோடும் வளமோடும் வாழ்வோமாக... வாழ்க வளமுடன்...
🤹 *இன்றைய மூலிகை*
🤹 *வேப்பிலை* தேவையான பொருட்கள், வேப்பிலை 5, சின்ன வெங்காயம் 1, மிளகு 3, சீரகம் 10, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள். (ஒரு நபருக்கான அளவு) இவைகளை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 20 நிமிடம் வாயில் இருக்கும்படி மென்று உமிழ்நீரை சிறிதுசிறிதாக விழுங்கவும்.
🤹 நன்மைகள்:- நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் பலம் பெறுகிறது, ரத்தம் தூய்மையாகிறது, படிப்படியாக உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகரிக்கிறது.
🤹 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🤹 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🤹 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🤹 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment