♻️💢♻️💢♻️💢♻️💢♻️💢♻️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 15*
♻️💢♻️💢♻️💢♻️💢♻️💢♻️
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 இந்த மண்ணுலகில் பிறந்த அனைத்து உருவத் தோற்றங்களும் மாற்றத்திற்கு உட்பட்டதே. மரணம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. மரணம் ஒரு முடிவல்ல தன்மாற்றம். ஆன்மா மற்றொரு நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை. விலங்குகளுடைய ஆன்மா உடலை விட்டு பிரிந்த சில நாள் பொழுதில் விண்ணோடும், காற்றோடும், நெறுப்போடும், நீரோடும், மண்ணோடும் கலந்துவிடும்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 மனிதனுடைய ஆன்மா அப்படி உடனடியாக கலப்பது இல்லை. அந்த ஆன்மா பெற்றுள்ள இன்ப துன்ப அனுபவங்களுக்கும், ஏற்ப பாவ பதிவுகளின் அளவு முறைக்கும் ஏற்ப அவை விண்ணோடும், காற்றோடும், நெறுப்போடும், நீரோடும், மண்ணோடும் கலப்பதற்கு காலங்கள் பல தேவைப்படுகிறது. உயிரைப் பற்றிய உண்மைகளை உணர்வதற்கு ஆழ்ந்து ஆழ்ந்து தவம் செய்து, "பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிரின் நிலை" என்ற தலைப்பில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பேசியுள்ள குறுந்தகடுகளையும், புத்தகத்தையும் மீண்டும், மீண்டும் திரும்பத் திரும்ப கேட்டும், படித்தும் தற்சோதனை செய்யுங்கள்.
🌀 *இன்றைய பண்புப் பயிற்சி*
🌀 எடுத்த எடுப்பில் உடனடியாக நல்ல பலன்களும் அனுபவமும் கிடைப்பதற்கு இல்லை. ஆதலினால் சோர்ந்துவிடாமல் விடாமுயற்சியோடு மீண்டும் மீண்டும் தற்சோதனை செய்யுங்கள், சிந்தனை செய்யுங்கள். அயரா விழிப்பு நிலையோடு இருந்து வாழும் பண்பில் உயர்வு பெற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நம்முடைய ஆன்மாவைப் பற்றிய உண்மைகளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். உயிரைப் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பிறவி எடுத்து இருக்கிறோம். இப்பிறவியிலேயே வெற்றி பெறுவோம். வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌀 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌀 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment