🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 13*
🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳
🎱 *இன்றைய நித்தியகடன்*
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎱 *இன்றைய சாதகம்*
🎱 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🎱 *இன்றைய நற்சிந்தனை*
🎱 மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு மனிதர்களுக்கு உண்டு. எல்லா வகையான இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவம் ஆக்கிக் கொள்ள மனிதனுக்கு மட்டுமே ஏகபோக உரிமை உண்டு. மற்ற ஜீவராசிகள் சில வகையான இன்பங்களையும், துன்பங்களையும் தவிர்க்கவே முடியாது அனுபவித்தே தீரவேண்டும். ஆனால் மனிதனுக்கு இந்நீதி மாறுகிறது. மனிதன் நினைத்தால் சில இன்பங்களையும், துன்பங்களையும் குறைத்தும் தவிர்த்தும் கொள்ளலாம்.
🎱 *இன்றைய தற்சோதனை*
🎱 தலைக்கு வருவதை தலைப்பாகையோடு தவிர்த்துக்கொள்ளலாம். இந்த திறமையும் ஆற்றலும் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது. இதற்கு தேவையானதெல்லாம் சீரான அறிவாட்சிதரமும், முறையான பயிற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் இந்த திறமையை எவ்வாறெனினும் தனக்குள் வளர்த்துக் கொள்ள முடியும். நாள்தோறும் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை விட்டுக் கொடுத்து விடாமல் எப்போதும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
🎱 *இன்றைய பண்புப் பயிற்சி*
🎱 பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவைகளில் இருந்தெல்லாம் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் நீங்கள் உங்களுக்குள் இடம் கொடுத்து பிரம்மாண்டமாக வளர்த்தி விட்டதால்தான் துன்பங்களை தவிர்த்துக் கொள்ளவும், இன்பங்களில் அளவு முறையோடு முறைப் படுத்திக் கொள்ளவும், அதிகப்படியாக முயற்சி எடுக்க வேண்டி உள்ளது. இருந்த போதிலும் விடாமுயற்சி செய்து இதில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். விடாமுயற்சி எனும் பண்பில் எல்லா வழிமுறைகளிலும் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...
🎱 *இன்றைய மூலிகை*
🎱 எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும். இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம். கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.
🎱 பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.
🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎱 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment