🔘🕳️🔘🕳️🔘🕳️🔘🕳️🔘🕳️🔘
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 12*
🔘🕳️🔘🕳️🔘🕳️🔘🕳️🔘🕳️🔘
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 மனித வாழ்க்கையின் அடுத்தடுத்த நொடிகளை எதிர்கால நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது எல்லாம் ஒவ்வொரு தனி மனிதனுடைய புரிதலே ஆகும். இந்த புரிதலானது வாழ்க்கை சூழ்நிலைகளை சிந்திக்கவும் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தூண்டுதலையும் கொடுக்கிறது இவ்வாறான இந்த புரிதளுக்கு அடிப்படையாக இருப்பது மனிதர்களுடைய குணம் தன்மை (character) இதுதான் எதிர்கால அமைப்பை உருவாக்கி அங்கே செல்வதற்கான வழித்தடமாகவும் நமக்குள்ளே இருந்து கொண்டு நம்மோடு பயணிக்கிறது நம்மை கண்காணித்துக் கொண்டே...
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு வகையான குணங்களை தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறார்கள் சிலர் மற்றவர்கள் நல்லதை சொன்னாலும் அதை தீமையாகவே புரிந்து கொள்வார்கள் சிலர் தீமையாக இருந்தாலும் அதை நல்லதாகவே எடுத்துக் கொள்வார்கள். ஒருவருடைய குணம் அவருடைய புரிதலை மாற்றியமைக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்கால நிலைமை உருவாக்குவதில் அவரவர் குணம் பெரும் பங்கு வகிக்கிறது இதனை நன்றாக தற்சோதனை செய்து சீர்திருத்தங்களை உருவாக்கிக் கொள்வோம் நமக்குளாக...
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 நம்மை சுற்றி எல்லாமும் இருக்கிறது நாம் அவைகளில் எல்லாம் இருக்கக் கூடிய நன்மைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த அடுத்த கட்டத்திற்கு நம்மை முழுமையாக நகர்த்திக் கொள்ள வேண்டும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது அங்கேயே விட்டுச் செல்வது நம்முடைய விலங்கின பதிவாக இருக்க வேண்டுமே தவிர நம்முடைய நல்ல குண நலன்களாக இருக்கக்கூடாது நல்ல குணங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வோமேயானால் அது நம்மை பாதுகாக்கும் அரணாக இருந்து வழி நடத்தும். வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🍁 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🍁 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment