⭕♻️⭕♻️⭕♻️⭕♻️⭕♻️⭕
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 11*
⭕♻️⭕♻️⭕♻️⭕♻️⭕♻️⭕
🔰 *இன்றைய நித்தியகடன்*
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 *இன்றைய சாதகம்*
🔰 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🔰 *இன்றைய நற்சிந்தனை*
🔰 எதை நோக்கி உங்களுடைய எண்ணம் பயணிக்க வேண்டும், என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மனதை அதன்போக்கில் விட்டால் அது எல்லா இடங்களிலும் பாயும், ஓடும், பாய்மப்பொருளாக இருக்கக்கூடிய மனதிற்கு சரியாக ஒரு இலக்கை உருவாக்கிக் கொடுங்கள். அதனுடைய உயர்ந்த சிறப்புமிக்க தன்மைக்கு அதை உயர்த்துவதற்கு நீங்கள் தான் அதற்கு உதவி செய்ய வேண்டும்.
🔰 *இன்றைய தற்சோதனை*
🔰 மனதை எதன்மீது வேண்டுமானாலும், செலுத்தலாம் அப்போது மனம் அதுவாகிவிடும். இது மனதினுடைய இயல்பான தன்மை எதன் மீது செலுத்தி மனதை எதுவாக மாற்ற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானம் செய்யுங்கள். சிறப்புமிக்க அமைப்பை கொண்ட மனித குலம் இதை உளமாற ஏற்று உயர்வு பெற வேண்டும். தற்சோதனை செய்து விழிப்பு நிலையில், நின்று மனதை நுட்பமான வழிமுறைகளில் செலுத்த வேண்டும் என்ற இடத்தையும் இலக்கையும் உருவாக்கித்தரும்.
🔰 *இன்றைய பண்புப் பயிற்சி*
🔰 எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் தெளிவாக உணர்ந்து விடமுடியுமென்று எண்ணாதீர்கள். ஆங்காங்கே சிறு சிறு பிழைகள் எழத்தான் செய்யும், இருக்கத்தான் செய்யும் அவைகளை அடுத்த செயல்பாட்டில் சீரமைத்துக் கொண்டு, எல்லா நேரமும் தற்சோதனையோடு, விழிப்பு நிலையோடு, புலன்களையும், புலன் கடந்த நிலைகளையும் பயன்படுத்தும் பண்பில் உயர்வோம். இந்த பண்பே நம்மை நமக்கு அடையாளம் காட்டும். வாழ்க வளமுடன்...
🔰 *இன்றைய மூலிகை*
🔰 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🔰 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🔰 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🔰 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🔰 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🔰 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment