🌀🚥🌀🚥🌀🚥🌀🚥🌀🚥🌀
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 09*
🌀🚥🌀🚥🌀🚥🌀🚥🌀🚥🌀
💢 *இன்றைய நித்தியகடன்*
💢 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💢 *இன்றைய சாதகம்*
💢 செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
💢 *இன்றைய நற்சிந்தனை*
💢 எண்ணம் ஆராய்தல் பயிற்சியை அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், நான்கு ஆண்டு காலம் ஆய்வு செய்து கண்டறிந்த உண்மைகளை, நமக்கு செய்முறைப் பயிற்சியாக வழங்கியிருக்கிறார்கள். துரியத்திற்கும், துரியாதீதத்திற்கும் இடையில் எண்ணம் ஆராய்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பயிற்சியின் முக்கியத்துவத்தை ஆசான் நன்றாக உணர்ந்ததால், இதனை முதல்நிலை அகத்தாய்வில் இடம்பெறச் செய்திருக்கிறார்கள். எண்ணங்களை ஒழுங்கு படுத்தாமல் துரியாதீதமும் கிட்டாது, யோக சாதனையில் வெற்றி பெறவும் முடியாது, என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.
💢 *இன்றைய தற்சோதனை*
💢 விலங்கின பதிவு, தீவினை பதிவு, பாவப் பதிவு இவை மூன்றுமே ஒன்றுதான். இந்த பதிவுகளின் தூண்டுதலால் ஏற்படும், உணர்ச்சி நிலை எண்ணங்கள் தான் பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு வகையான குணங்களாகும். மனித இனப் பதிவு, நல்வினை பதிவு, புண்ணிய பதிவு இவை மூன்றும் ஒன்று தான். இந்த பதிவுகளின் தூண்டுதலால் நிறை மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமநேர்உணர்வு, மன்னிப்பு இந்த ஆறுவகையான குணங்களும் எழுகின்றன. இவைகளை தற்சோதனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்யுங்கள்.
💢 *இன்றைய பண்புப்பயிற்சி*
💢 தேவை, பழக்கம், சூழ்நிலை, பிறர் மனத் தூண்டுதல், கருவமைப்பு, தெய்வீகம்... நமக்கு எண்ணங்கள் எழுவதற்கு இந்த ஆறு வகையான காரணங்களே அடிப்படையாகும். இவை அனைத்தையும் நாம் பயிற்சி செய்து நமக்கு அவ்வப்போது, எழக்கூடிய எண்ணங்களை முறைப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பண்பில் உயரும்போது தான் நம்முடைய தவ வாழ்க்கை புலன் வயப்பட்ட நிலையில் இருந்து, அறிவு சார்ந்த நிலைக்கு உயர துவங்கும் எண்ணம் ஆராய்தல் பயிற்சியில் வெற்றி காண்பதே மற்ற அனைத்து வெற்றிக்கும் மூலம் என்பதை உணர்வோம். வாழ்க வளமுடன்...
💢 *இன்றைய மூலிகை*
💢 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
💢 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
💢 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💢 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💢 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💢 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment