🔮♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️🔮
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 04*
🔮♨️🔮♨️🔮♨️🔮♨️🔮♨️🔮
💐 *இன்றைய நித்தியகடன்*
💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💐 *இன்றைய சாதகம்*
💐 வியாழக்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
💐 *இன்றைய நற்சிந்தனை*
💐 சித்தர்களும் மகான்களும் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்க மாட்டார்கள். இரவு உணவு உண்ண மாட்டார்கள். பசியோடு அமர்ந்து உணவை உண்ணத் துவங்கி பசியோடு எழுந்துவிடுவார்கள்.
அக நிகழ்ச்சிகளை ஆராய்வார்கள் ஆழ் நிலையிலேயே வாழ்வார்கள். பகல் நேரங்களில் படுத்து உறங்க மாட்டார்கள். தலை முடிக்கு எண்ணெய் வைக்க மாட்டார்கள். நாள் ஒன்றிற்கு நான்கு மணி நேரத்திற்கு மேல் இரவு உறங்க மாட்டார்கள். பூமியில் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் போது அவைகளுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் உயிர்ப்பு தன்மையோடு பயன்படுத்துவார்கள். எண்ணம், பேச்சு, செயல் இவைகளில் அளவு முறையை முழுமையாக பின்பற்றுவார்கள்.
💐 *இன்றைய தற்சோதனை*
💐 இவ்வாறு வாழும்போது நமக்குள்ளாக தங்கித் தழைக்கக்கூடிய ஜீவ காந்த சக்தியின் அளவும் உயிர் துகள்களின் அடர்த்தியும் அபரிமிதமாக நிறம்புகின்றன. ஜீவகாந்தத்தினுடைய அழுத்தமும், அடர்த்தியும் அதிகமாக இருக்கும்போது இறையுணர்வும், அறநெறியும் இயல்பான தன்மையாக அமைகிறது. என்ற உண்மையை சிந்தித்து தற்சோதனை செய்து இவ்வாழ்க்கை முறையை உளமாற ஏற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம்.
💐 *இன்றைய பண்புப் பயிற்சி*
💐 ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பமும் அமைதியோடு வாழ்வதற்காக, அந்த காலங்களில் சித்தர்களும் மகான்களும் நல்லதையே பேசுங்கள், சிந்தியுங்கள், நல்லபடியாகவே வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அறிவில் முழுமை பெற்று விட்டால் நாம் இப்படித்தான் வாழ்வோம். இந்த அறிவில் முழுமை கிடைத்தபின் வாழும் முறையை அதற்கு முன்னதாகவே வாழத் துவங்கி விட்டால், அது சிறுகசிறுக அறிவை முழுமையாக்கிவிடும். இந்த அறிவில் முழுமை பெறும் பண்பில் நாளுக்கு நாள் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...
💐 *இன்றைய மூலிகை*
💐 எண்ணெய் கொப்பளித்தல் காலையில் எழுந்ததும் கை, கால், முகம் கழுவிவிட்டு குளிர்ந்த நீரை பயன்படுத்தி வாயை நன்றாக கொப்பளித்து தண்ணீரை துப்பி விடவும் *குறிப்பு*:- எண்ணையை கொப்பளிப்பதுக்கு முன்பாக பற்பசையை, அல்லது பல் பொடியைப் பயன்படுத்தி பல் துலக்க கூடாது. ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் வாய்ல் வைத்துக் கொண்டு 20 நிமிடம் வாயை கொப்பளிக்கவும் ஒரு சொட்டு விழுங்கி விடாமல் கவனமாக இருக்கவும். 20 நிமிடம் கழித்து முழுமையாக துப்பிவிட வேண்டும். இதன்பின் வழக்கம்போல் பற்பசையையோ பல் பொடியையோ பயன்படுத்தி பல்துலக்கி கொள்ளலாம் கூடுமானவரை உடலுக்கு தீங்கான ரசாயன பற்பசையைகளை தவிர்க்கவும்.
💐 பலன்கள் வயிற்றுப்புண், அஜீரண கோளாறு, பெண்களுக்கான மாதவிடாய் கோளாறு, மலச்சிக்கல், மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மை அனைத்தையும் முழுமையாக வெளியேற்றி விடும்.
💐 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💐 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💐 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment