🎱🍀🎱🍀🎱🍀🎱🍀🎱🍀🎱
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 31*
🎱🍀🎱🍀🎱🍀🎱🍀🎱🍀🎱
🌀 *இன்றைய நித்தியகடன்*
🌀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌀 *இன்றைய சாதகம்*
🌀 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🌀 *இன்றைய நற்சிந்தனை*
🌀 இயற்கைக்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இந்த தொடர்புகளில் நம் புலன்களுக்கு உட்பட்டவைகளும் இருக்கின்றன, அவைகளை சாதாரணமாகவே புரிந்துகொள்ள முடியும். புலன்களை கடந்த நிலையில்தான் சில உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும். அவ்வாறான உண்மையை உணர மனதை உயிருக்குள் ஒடுங்கி ஆழ்ந்து, மனதை கொண்டு சென்று, தவம் செய்து பழகப் பழக அந்த சில உண்மைகளை உணர்ந்து கொள்ள முடியும். எதுவுமே சுலபமாக அமைந்துவிடாது. வைராக்கியத்தோடும், நந்னம்பிக்கையோடும், முயற்சிக்க வேண்டும்.
🌀 *இன்றைய தற்சோதனை*
🌀 வானவில்லின் வண்ணங்கள் ஏழு, கோள்கள் ஏழு, உண்ணும் உணவு தன்மாற்றம் பெறும் தாதுக்கள் ஏழு, உடலில் உள்ள மையங்கள் ஏழு, இன்னும் பல ஏழு இருக்கலாம். அதை நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். இவைகளை வைத்து சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உயிர் எப்படி சுழல்கிறது, காந்தம் எப்படி அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனமாக தன்மாற்றம் பெறுகிறது. ஒன்றில் இருக்கக் கூடிய தன்மை இன்னொன்றுக்கு எவ்விதத்தில் இடம் பெயர்கிறது? கோள்கள் எல்லாம் ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமல் எப்படி இயங்குகிறது? மேலும் இந்த பூமியின் மேற்பரப்பில் நாம் வாழ்கின்றோம், கீழே விழுந்துவிடாமல் எப்படி பூமியின் மேல் வசிக்கிறோம்? என்பதையெல்லாம் மனதை தவ பயிற்சியில் இணைத்துக் கொண்டு சிந்திக்கும் போது மட்டுமே உணர முடியும்.
🌀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌀 மறைபொருளாக இருக்கக்கூடிய இறைநிலையின் தன்மாற்றங்கள் ஏராளம் ஏராளம். அவைகளுக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. இந்த மறைபொருள் உண்மைகளை பற்றியெல்லாம் உணர்ந்து தெளிவு பெற்றால் தான், நம்முடைய வாழ்க்கை முழுமை பெறும். இந்த மனிதப்பிறவி என்பது ஆறாவது அறிவில் முழுமை பெறுவதற்காகவே உருவானதாகும். முழுமை பெற நாள் தவறாமல் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஈடு இணையில்லாத இறைநிலையின், தன் மாற்றத்தை உணர்வோமாக வாழ்க வளமுடன்...
🌀 *இன்றைய மூலிகை*
🌀 *சின்ன வெங்காயம்+தேன்*
தேவையான பொருட்கள், சின்ன வெங்காயம் 10 கிராம்
தண்ணீர் 90ml
தேன் ஒரு டீஸ்பூன்
🌀 செய்முறை:- சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து தண்ணீர் கலந்து சாறு எடுத்துக் கொள்ளவும், அதனோடு தேன்கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தினமும்.
🌀 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, அஜிரணம் என அனைத்தும் குணமாகும், *குறிப்பு:- சின்ன வெங்காயம் சாறும், மூன்று மாத குழந்தைக்கு மூன்று சொட்டு போதுமானது, ஒரு வயது குழந்தைகளுக்கு 2.5ml போதுமானது*.
🌀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌀 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment