நித்தியகடன் அக்டோபர் 30 2021

♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 30*

♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️

🔶 *இன்றைய நித்தியகடன்*

🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

🔶 *இன்றைய சாதகம்*

🔶 சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.
 
🔶 *இன்றைய நற்சிந்தனை*

🔶 பத்தி மார்க்கத்திற்கும் ஞான மார்க்கத்திற்கு ஒரு சிறிய வேறுபாடு தான் இருக்கிறது. ஞான மார்க்கம் என்பது நாம் செய்யும் செயல்கள் வாழ்க்கை முறைகள் அனைத்தையும் புரிந்து கொண்டு, அந்த நிலையில் இருந்து வாழ்வது. பக்தி மார்க்கம் என்பது இவை அனைத்தினுடைய துவக்கம். தெளிவாக வாழ்வதற்கான அடிப்படை பயிற்சி முறையே பக்தி மார்க்கமாகும். ஞான மார்க்கத்தில் சரணாகதி தத்துவம் என்பது கிடையவே கிடையாது. நாம் யாரையும் எதையும் சரண் அடையத் தேவையுமில்லை. 

🔶 *இன்றைய தற்சோதனை*

🔶 முழு நம்பிக்கை அசைக்க முடியாத ஐயமே இல்லாத ஆழமான நம்பிக்கை "*ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து*" அறநெறிகளை பின்பற்றுவதே ஞானமார்க்கம் இதற்கு இதுதான் விளைவு என்ற செயல் விளைவு கோட்பாடுதான் ஞானமார்க்கம். இதனால் இவை நடைபெறுகின்றன, இதற்குரிய மூல காரணங்கள் என்னென்ன, இவைகள் எதனால் திசைமாறுகிறது, திருப்பங்களோடு வாழ்க்கை ஏன் பன் முகத்தோடு செயல்படுகிறது, என்ற அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழ்வதே ஞானமார்க்கம். இது தற்சோதனையில் நம்மை எந்த அளவுக்கு ஈடுபடுத்திக் கொள்கிறோமோ அந்த அளவு ஞானமார்க்கம் நமக்குள் ஒளிரத் துவங்கும்.

🔶 *இன்றைய பண்புப் பயிற்சி*

🔶 செயலுக்குத் தக்க விளைவு இருக்கிறது என்ற உண்மையை எல்லா வகையிலும் தற்சோதனை செய்து முழுமையாக ஏற்றுக் கொண்டு அதன் வழியில் மனதை ஆழப்படுத்திக் கொண்டும், அகலப்படுத்திக் கொண்டும் விழிப்பு நிலையோடு வாழும் பண்பில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த பண்பு ஞான மார்க்கத்தின் துவக்கமாக அமைகிறது. ஞான மார்க்கத்தில் உயர்வோம், வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🔶 *இன்றைய மூலிகை*

🔶 *நீராவி பிடித்தல்* குடிநீர் 1,1/2 லிட்டர் நன்றாக கொதிக்கவைத்து ஒரு போர்வையை போர்த்தி வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாகவும். மூக்கு வழியாக இழுத்து வாய் வழியாகவும் மாற்றி மாற்றி நீராவியை இழுத்து விடவும். காலை, மாலை இரண்டு வேளையும் பயன்படுத்தலாம். குறிப்பு:- மினரல் வாட்டர் தவிர்க்கவும்.

🔶 நன்மைகள்:- ஆஸ்மா, நெஞ்சுசளி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி என அனைத்தும் குணமாகும், 

🔶 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔶 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔶 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔶 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments