நித்தியகடன் அக்டோபர் 29 2021

🔰🍁🔰🍁🔰🍁🔰🍁🔰🍁🔰

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 29*

🔰🍁🔰🍁🔰🍁🔰🍁🔰🍁🔰

👁️‍🗨️ *இன்றைய நித்தியகடன்*

👁️‍🗨️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

👁️‍🗨️ *இன்றைய சாதகம்*

👁️‍🗨️ வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.
 
👁️‍🗨️ *இன்றைய நற்சிந்தனை*

👁️‍🗨️ தேவைகளை முறைப்படுத்தி கொள்ளாத தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு தேவையில்லாததை எல்லாம் தேவையாக்கிக் கொள்வார்கள். இன்று உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து வகையான சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்பாடுகளும் தேவையை முறைப்படுத்திக் கொள்ளத தனிமனித வாழ்க்கை முறை ஒன்றுதான் மூல காரணமாக இருக்கிறது. நம்முடைய தேவை எவ்வாறு உருவாகிறது எது இயற்கையானதா அல்லது செயற்கையானதா, இயற்கை என்றால் அதில் அளவுமுறை காப்போம் மாறாக செயற்கை என்றால் அதை யார் உருவாக்குகிறார்கள் அவர்களின் நோக்கம் என்ன? அதன் ஆழம் அகலம் நீளம் விளைவுகள் அனைத்தையும் சிந்தித்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

👁️‍🗨️ *இன்றைய தற்சோதனை*

👁️‍🗨️ அரசியல், பொருளாதாரம், தொழில்துறை, விஞ்ஞானம், கல்வி, சுகாதாரம், தனிமனித பாதுகாப்பு என இவை அனைத்திலும் இருக்கக்கூடிய குழப்பங்களுக்கும் தேங்கி நிற்கும் தடைகளுக்கும் தேவையை முறைப்படுத்தாத, ஒவ்வொரு தனி மனிதன் வாழும் முறையே காரணமாக அமைந்திருப்பதை, நாம் உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை ஒப்பிட்டு சிந்தித்து பார்த்தோமேயானால், தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். மேலும் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் அவரவருக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பயிற்சி முறையும் தன்னார்வமும் தேவை.

👁️‍🗨️ *இன்றைய பண்புப்பயிற்சி*

👁️‍🗨️ பன்னெடுங்காலமாக இந்த மனித சமுதாயம் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கிறது. விளக்கத்தின் வழியாக நின்று நிலைத்து அதுவாகி, வாழ்வதற்கு நாம் அளவுமுறையோடு கூடிய பயிற்சி ஒன்றை பின்பற்ற வேண்டும். அத்தகைய பயிற்சி உளவியல், அறிவியல், இறையியல், உடலியல், இயற்பியல் என அனைத்திற்கும் மூலமான ஒரு கோட்பாடை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த சிறப்புமிக்க பயிற்சி முறைதான் வேதாத்திரியம். எல்லா வகையான பாடத்திட்டமும் இதற்குள் உள்ளடங்கும் இத்தகைய சிறப்பான பயிற்சியை ஆராய்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நாள் தவறாமல் செய்து வாழ்வோம். வாழ்க வளமுடன்...

👁️‍🗨️ *இன்றைய மூலிகை*

👁️‍🗨️ *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

👁️‍🗨️ செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

👁️‍🗨️ *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

👁️‍🗨️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

👁️‍🗨️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

👁️‍🗨️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

👁️‍🗨️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments