♦️〰️♦️〰️♦️〰️♦️〰️♦️〰️♦️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 28*
♦️〰️♦️〰️♦️〰️♦️〰️♦️〰️♦️
💠 *இன்றைய நித்தியகடன்*
💠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💠 *இன்றைய சாதகம்*
💠 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
💠 *இன்றைய நற்சிந்தனை*
💠 மனம் என்பது திடப்பொருளோ அல்லது திரவ பொருளோ அல்ல. இதற்கு என்று தனியாக ஒரு வடிவமோ, அடையாளமோ கிடையாது. மனதை எதனோடும் உவமைப்படுத்தி பேசி விடவும் முடியாது. ஏனெனில் நம் மூளை செல்கள் வழியாக நாம் எதை எதையெல்லாம் உணர்கிறோமோ, எண்ணுகிறோமோ அதுவெல்லாம் மனமே ஆகும். மனம் இறைநிலையின் தன் மாற்றத்தில் மொத்த சிறப்புகளையும் உள்ளடக்கிக் கொண்டு நமக்குள் அமைந்திருக்கும் மாபெரும் பொக்கிஷமாகும்.
💠 *இன்றைய தற்சோதனை*
💠 மனமாகபட்டது சகலவிதமான நிலைகளோடு் இணைந்து இயங்கக் கூடியது. நினைப்பதெல்லாம், பார்ப்பதெல்லாம், பேசுவதெல்லாம் மனமே ஆகும். மனமே அனைத்துமாக இருப்பது மனம் தான் தனக்கென்று தனியாக ஒரு அடையாளம் இல்லாத பொருள். மனம் புலன்களால் உணர முடியாத பொருள். ஆனால் அது புலன்கள் வழியாக தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவே காந்தமுமாகும் தற்சோதனையால் மனதின் தன்மையும் தரமும் உயர்வு பெறும்.
💠 *இன்றைய பண்புப் பயிற்சி*
💠 காந்தம் எதனோடு இணைகிறதோ அதுவாகவே தன்மாற்றம் பெரும். இந்த பெரும் மதிப்பும் சிறப்புமிக்க காந்தமே மனிதர்களுக்குள் மனமாக இயங்குகிறது. இப்பெருமை மிகு காந்தத்தை உணர்வதற்கு மனதை பக்குவப்படுத்திக் கொண்டு பண்போடு நடந்து கொள்ள வேண்டும்.
"தான் துன்பப்டாமலும் பிறரை துன்பப்படுத்தாமலும் வாழ்பவரால் மட்டுமே" காந்தத்தின் மதிப்பை உணர முடியும். வாழ்க வளமுடன்...
💠 *இன்றைய மூலிகை*
💠 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
💠 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
💠 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
💠 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
💠 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
💠 *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment